»   »  சமுத்திரக்கனி ஆணாதிக்கம் மிக்கவரா... என்ன சொல்ல வருகிறார் வரலட்சுமி?

சமுத்திரக்கனி ஆணாதிக்கம் மிக்கவரா... என்ன சொல்ல வருகிறார் வரலட்சுமி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆணாதிக்கம் பிடித்த தயாரிப்பாளர்களுடன் இணைந்து என்னால் பணியாற்ற முடியாது என்று கூறி, சமுத்திரக்கனியின் மலையாளப் படத்திலிருந்து நடிகை வரலட்சுமி விலகியுள்ளார்.

சமுத்திரகனி நடித்து, இயக்கி, தயாரித்து வெளிவந்த 'அப்பா' படம் தமிழில் நல்ல வெற்றியைப் பெற்றது. இப்படத்தை மலையாளத்திலும் சமுத்திரகனி ரீமேக் செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. மலையாளத்தில் இப்படத்திற்கு 'ஆகாச மிட்டாய்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.

Varalakshmi walks out from Appa remake

சமுத்திரகனி நடித்த கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி ஒப்பந்தமாகியிருந்தார்.

இப்போது படத்தில் இருந்து வரலட்சுமி விலகிவிட்டதாக திடீரென அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஆணாதிக்கம், நற்பண்பு இல்லாத தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவதற்கு என்னால் முடியாது," என்றார்.

படத்தை தயாரித்து இயக்குபவர் சமுத்திரக்கனிதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆணாதிக்கம் மிகுந்தவர் என சமுத்திரக்கனியைச் சொல்கிறாரா அல்லது தனக்கு ஜோடியாக நடிக்கவிருந்த ஜெயராமைச் சொல்கிறாரா?

தன்னைப் புரிந்து கொண்டு, படத்திலிருந்து விலக அனுமதித்ததற்கு சமுத்திரக்கனி மற்றும் ஜெயராமுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார் வரலட்சுமி. சொல்றத தெளிவாச் சொல்லிட்டுப் போகக் கூடாதா?!

English summary
Actress Varalakshmi has walked out from Samuthirakkani movie with a note that she couldn't work with male chauvinist producers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil