மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் வரலட்சுமி: காரணம் தெரியுமா?
Recommended Video

அரசியல் மற்றும் திருமணம் பற்றி பேசிய வரலஷ்மி- வீடியோ
சென்னை: முதல் முறையாக தந்தையுடன் சேர்ந்து நடிக்கும் மகிழ்ச்சியில் உள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடித்து வரும் படம் பாம்பன். இந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடி என்று யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

மொட்டை ராஜேந்திரன், கஞ்சா கறுப்பு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். இந்நிலையில் பாம்பன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
வரலட்சுமி முதல் முறையாக தனது தந்தையுடன் சேர்ந்து நடிக்கிறார். இதனால் அவர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். ஸ்ருதி ஹாஸன் தனது தந்தை கமல் ஹாஸனுடன் சேர்ந்து நடிக்கும்போது வரலட்சுமிக்கும் அதே வாய்ப்பு கிடைத்துள்ளது.
மகள் தனது படத்தில் நடிப்பதை சரத்குமார் ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications