»   »  'மாரி 2' படத்தில் இன்னொரு நடிகை... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'மாரி 2' படத்தில் இன்னொரு நடிகை... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தனுஷ் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் மாரி'. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக இருக்கிறது. 'மாரி -2' படத்தை பாலாஜி மோகன் இயக்க, ஒளிப்பதிவாளராக ஓம்பிரகாஷ், முதற்பாகத்தின் கதாபாத்திரம் போலவே ரோபோ ஷங்கர் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வடசென்னை' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து 'மாரி -2' படப் பணிகளில் இறங்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை தனுஷே தயாரிக்க இருக்கிறார்.

Varalaxmi doing pivotal role in Maari 2

இப்படத்தின் வில்லனாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வாலுக்கு பதிலாக 'ப்ரேமம்' புகழ் 'மலர் டீச்சர்' சாய் பல்லவி 'மாரி 2'-வில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

'மாரி 2' படத்தில் தற்போது நடிகை வரலட்சுமியும் இணைந்திருக்கிறார். இந்தப் படத்தில் வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்தத் தகவலை படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

'மாரி 2' படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தின் இசை வேலைகள் தொடங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷும், யுவனும் இந்தப் படத்தின் மூலம் இணைகிறார்கள்.

English summary
Dhanush starrer 'Maari 2' will be directed by Balaji Mohan. Sai Pallavi is going to pair with Dhanush in 'Maari 2'. Actress Varalaxmi plays the pivotal role in this film. Yuvan Shankar Raja has been signed as a music composer for 'Maari 2'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X