»   »  நாட்டாமை மகளுக்கு ரொம்ப பெரிய மனசு: பாராட்டும் ரசிகர்கள்

நாட்டாமை மகளுக்கு ரொம்ப பெரிய மனசு: பாராட்டும் ரசிகர்கள்

By Siva
Subscribe to Oneindia Tamil

சென்னை: தினமும் பள்ளிக்கு 7 கிலோமீட்டர் நடந்து செல்லும் அரசு பள்ளி மாணவிகளை தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு பிசியாக இருந்தாலும் சமூக சேவை செய்யத் தவறுவது இல்லை வரலட்சுமி சரத்குமார். என் வழி தனி வழி என்று சென்று கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவர் அரசு பள்ளி மாணவிகளை தனது காரில் அழைத்துச்சென்றுள்ளார். இது குறித்த வீடியோவை அவர் ட்விட்டரில் வெளியிட்டு கூறியிருப்பதாவது,

கார்

தினமும் பள்ளிக்கு 7 கிலோமீட்டர் நடந்து செல்லும் இந்த மாணவிகளை பார்த்து பெருமையாக உள்ளது. இன்று கார் பூல் தினம். அவர்களை பிக்கப் டிராப் செய்ய முடிவு செய்தேன். அவர்களின் முகத்தில் ஒரே மகிழ்ச்சி. அதை பார்த்து எனக்கு மகிழ்ச்சி. கடவுள் அவர்களை ஆசிர்வதிக்கட்டும். அவர்கள் பெருமையுடன் காரில் இருந்து இறங்கியதை பார்த்தது சிறப்பாக இருந்தது என்றார்.

குறை

சிறுமிகளை பள்ளியில் இறக்கிவிட்ட வரலட்சுமி அவர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு எவ்வளவு இருந்தாலும் குறை சொல்கிறோமே என்று தத்துவம் பேசியுள்ளார்.

மகிழ்ச்சி

மாணவிகளுக்கு உதவிய மகிழ்ச்சியில் இருக்கும் வரலட்சுமியிடம் சர்கார் அப்பேட்ட கேட்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

முதல்வர்

சிவனேன்னு சேவை செய்யும் வரலட்சுமியை அரசியலில் கோர்த்துவிடப் பார்க்கிறார்களே? அதுவும் ஸ்ரெய்ட்டா முதல்வர் போல....

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Actress Varalaxmi Sarathkumar tweeted that, 'So proud of these girls who walk everyday 7km to school..today was car pool day.decided to pick them up and drop them..so much excitement n happiness on their faces..makes my heart melt..god bless them..so amazing to see them feel so proud when they get of car..makes me wonder(1)'

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more