தேங்க்யூ செல்லம்.. ஆனா எனக்கு இன்னைக்கு பர்த்டே இல்லை.. கீர்த்தி சுரேஷுக்கு வருவின் க்யூட் ரிப்ளை!

சென்னை: நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமாருக்கு இன்று பிறந்தநாள் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

ஆனால், இன்று தனக்கு பிறந்தநாள் இல்லை என கூறியுள்ளார் வரலக்‌ஷ்மி சரத்குமார்.

முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷும் வரலக்‌ஷ்மிக்கு வாழ்த்து சொல்ல, அவருக்கும் க்யூட்டாக வரலக்‌ஷ்மி அளித்துள்ள பதில் வைரலாகி வருகிறது.

மார்ச் 5

மார்ச் 5

நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமாருக்கு வரும் மார்ச் 5ம் தேதி தான் பிறந்தநாள். ஆனால், ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இன்று தான் நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமாருக்கு பிறந்தநாள் என வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

36 வயதினிலே

36 வயதினிலே

நடிகர் சரத்குமார் மற்றும் சாயா சரத்குமாருக்கு மகளாக கடந்த 1985ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி பிறந்த வரலக்‌ஷ்மி சரத்குமார் தனது 35வது பிறந்தநாளை வரும் 5ம் தேதி கொண்டாட உள்ளார். ஆனால், ஏகப்பட்ட ரசிகர்களும் பிரபலங்களும் அட்வான்ஸாக இன்று தான் அவருக்கு பர்த்டே என வாழ்த்தி வருகின்றனர்.

இன்னைக்கு இல்லை

இன்னைக்கு இல்லை

தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. ஆனால், என் பிறந்தநாள் இன்னைக்கு இல்லை வரும் மார்ச் 5ம் தேதி தான் என விளக்கி வருகிறார் வரலக்‌ஷ்மி சரத்குமார். சமீபத்தில் டோலிவுட்டில் அவர் நடித்த கிராக் மற்றும் நாந்தி படங்கள் எல்லாம் வேற லெவல் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ் வாழ்த்து

கீர்த்தி சுரேஷ் வாழ்த்து

நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமாருடன் தமிழில் சண்டக் கோழி 2 மற்றும் சர்கார் என இரண்டு படங்களில் இணைந்து நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார் உடன் இணைந்து இருக்கும் போட்டோவை ஷேர் செய்து, ஹேப்பி பர்த் டே வரு என வாழ்த்தி உள்ளார்.

தேங்யூ செல்லம்

தேங்யூ செல்லம்

கீர்த்தி சுரேஷின் வாழ்த்தை பார்த்த வரலக்‌ஷ்மி சரத்குமார், தேங்க்யூ செல்லம். ஆனால், எனக்கு மார்ச் 5ம் தேதி தான் பிறந்தநாள் என செம க்யூட்டாக போட்டுள்ள ரிப்ளை வைரலாகி வருகிறது. இன்னைக்கு விஷ் பண்ண எல்லாரும் மறக்காமல் வரும் 5ம் தேதி மீண்டும் வரலக்‌ஷ்மி சரத்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல மறந்துடாதீங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X