மாமியாருக்கு இப்படி ஒரு முத்தமா?.. வரலட்சுமி கணவர் செம காதல் வெச்சிருக்காரே.. வரு ரியாக்‌ஷன் பாருங்க

சென்னை: சரத்குமாரின் மகளான வரலட்சுமி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு உச்சக்கட்ட காதலோடு அவர்கள் தங்களது வாழ்க்கையை நகர்த்திவருகிறார்கள். வரு தொடர்ந்து நடிப்பதற்கு நிக்கோலாய் முழு ஆதரவை கொடுத்துவருகிறார். இந்நிலையில் வரலட்சுமியின் தாயான நடிகை சாயா தேவி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

வரலட்சுமி திரைத்துறைக்கு வந்தபோது அவரும் நடிகர் விஷாலும் சின்சியராக காதலிக்கிறார்கள் என்றும்; நடிகர் சங்க விவகாரத்தில் சரத்துக்கும், விஷாலுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக திருமணம் செய்யவிருந்த இரண்டு பேரும் அந்த முடிவிலிருந்து பின்வாங்கிவிட்டதாகவும் கிசுகிசுக்கள் தொடர்ந்து பரவின. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் அதனை உறுதி செய்யவும் இல்லை மறுக்கவும் இல்லை.

நிக்கோலாயுடன் திருமணம்: சூழல் இப்படி இருக்க மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுடன் வரலட்சுமிக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்தக் காதலுக்கு சரத்குமாரும் அவரது முதல் மனைவி சாயா தேவியும் க்ரீன் சிக்னல் கொடுத்தார்கள். அதனைத் தொடர்ந்து இரண்டு பேரும் தாய்லாந்தில் வைத்து கடந்த வருடம் கோலாகலமாக திருமணம் செய்துகொண்டார்கள் இத்திருமணத்தில் சரத்தின் முதல் மனைவி சாயா, இரண்டாவது மனைவி ராதிகா ஆகியோர் இணைந்து கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Varalaxmi Sarathkumar s Husband Nicholai Sachdev Kisses His Mother-in-Law on Birthday
Photo Credit:

விவாகரத்து ஆன நிக்கோலாய்: இதற்கிடையே நிக்கோலாய் சச்தேவுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தும் ஆகியிருந்தது. அந்தத் தம்பதிக்கு டீன் ஏஜில் ஒரு மகளும் இருக்கிறார். நிக்கோலாயை திருமணம் செய்துகொண்ட வரலட்சுமி அந்த பெண்ணிடமும் நல்ல விதமாகவே பழகி வருகிறார். இரண்டு பேரும் சேர்ந்து ஷாப்பிங் சென்ற புகைப்படங்கள்கூட வெளியாகி ட்ரெண்டானது.

நிக்கோலாயின் முடிவு: அதேபோல் திருமணத்தை முடித்த கையோடு செய்தியாளர்களை சந்தித்தபோது, இனி எனது பெயருக்கு முன்னால் வரலட்சுமியின் பெயரையும் இணைத்துக்கொள்வேன் என கூறி நிக்கோலாய் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும் நடிகர் சரத்குமாரிடமும் ரொம்பவே அன்யோன்யமாக பழகிவருகிறார். சரத்தும் அடிப்படையில் பாடி பில்டர் என்பதால் இரண்டு பேருக்குமான வேவ் லெங்த் இயல்பாகவே ஒத்துப்போகின்றன.

மாமியாருக்கு முத்தம்: சரத் மட்டுமின்றி தனது மாமியாரான சாயா தேவி மீதும் மிகுந்த அன்பையும், மரியாதையையும் வைத்திருக்கிறார் நிக்கோலாய். இந்நிலையில் சாயா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தின்போது வரலட்சுமியின் கணவர் தனது மாமியாருக்கு கன்னத்தில் அன்போடு முத்தம் கொடுத்து கேக்கையும் ஊட்டிவிட்டார். இதனைப் பார்த்த வருவோ உச்சக்கட்ட மகிழ்ச்சியில் கைகளை தட்டினார். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டுவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X