»   »  வரலட்சுமியை கலங்கவைத்த மரணம்... உருக்கமான ட்வீட்!

வரலட்சுமியை கலங்கவைத்த மரணம்... உருக்கமான ட்வீட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
வரலட்சுமியை கலங்கவைத்த மரணம்...வீடியோ

சென்னை : நடிகை வரலட்சுமி, விஷால் நடிக்கும் 'சண்டக்கோழி 2', தனுஷ் நடிக்கும் 'மாரி 2' ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

வரலட்சுமி வளர்த்து வந்த நாய் சமீபத்தில் இறந்துவிட்டது. இது குறித்து ட்விட்டரில் தன் சோகத்தைப் பகிர்ந்துள்ளார் வரலட்சுமி.

"ஐ லவ் யூ டினோ பேபி" என குறிப்பிட்டு தனது நாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

நடிகை வரலட்சுமி

நடிகை வரலட்சுமி

சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி சரத்குமார் 'போடா போடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், 'தாரை தப்பட்டை' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அனைவரிடமும் பாராட்டை பெற்றவர்.

மாரி 2

மாரி 2

வரலட்சுமி சில படங்களில் முக்கிய ரோல்களிலும் நடித்து அசத்தி வருகிறார். வரலட்சுமி தற்போது, விஷால் நடிக்கும் 'சண்டக்கோழி 2', தனுஷ் நடிக்கும் 'மாரி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விலங்குகள் நலன்

விலங்குகள் நலன்

மேலும் 'சேவ் சக்தி' என்ற அமைப்பின் மூலம் பெண்களுக்கான நல்ல விஷயங்களை செய்து வருகிறார் வரலட்சுமி. மேலும் விலங்குகள் நலத்தின் மீதும் அக்கறை கொண்டு விழிப்புணர்வும் செய்து வருகிறார்.

செல்ல நாய்

சமீபத்தில் வரலட்சுமி செல்லமாக வளர்த்து வந்த டினோ என்ற நாய் இறந்துவிட்டது. இது குறித்து அவர் ட்விட்டரில் தன் சோகத்தை பகிர்ந்துள்ளார். "ஐ லவ் யூ டினோ பேபி" எனக் கூறி அந்த நாயுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அளவில்லாத அன்புக்கு நன்றி

அளவில்லாத அன்புக்கு நன்றி

"டினோ நீ இந்த வீட்டில் ஒரு மனிதனாக இருந்தாய். எங்கள் மீது அளவில்லாமல் அன்பு செலுத்தியதற்கு நன்றி. நீ நல்ல இடத்தில் இருப்பாய் என நம்புகிறேன். உனக்கு நல்ல உணவு கிடைக்கும். நான் உன்னை இழந்துவிட்டேன்." என்று குறிப்பிட்டுள்ளார் வரலட்சுமி.

ரசிகர்களும் வருத்தம்

ரசிகர்களும் வருத்தம்

நடிகை வரலட்சுமியின் செல்ல நாய் டினோ இறந்ததால் அவரது ரசிகர்களும் வருத்தம் அடைந்துள்ளனர். வரலட்சுமிக்கு ஆறுதல் சொல்லி, இறந்துபோன நாய்க்குட்டிக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

English summary
Actress Varalaxmi's pet dog was recently dead. Varalaxmi shared his tragedy on Twitter. Varalaxmi posted "I love you dino baby" with photo of her dog.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil