twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துல்கரின் படம் சர்ச்சைக்குள்ளானதற்கு காரணம் லாக்டவுன் போரிங்கா? பிரபல இயக்குநர் பரபரப்பு பேச்சு!

    |

    சென்னை: துல்கர் சல்மானின் வரனே அவஷ்யமுண்டு படம் சர்ச்சையாக்கப்பட்டதற்கு காரணம் லாக்டவுனால் ஏற்பட்ட சலிப்புதான் என பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட Dulquer Salman | Prabhakaran

    அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் தயாரித்து நடித்த படம் 'வரனே அவஷ்யமுண்டு'. சுரேஷ் கோபி, ஷோபனா, கல்யாணி பிரியதர்ஷன், ஊர்வசி, மேஜர் ரவி, மீரா கிருஷ்ணன் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அண்மையில் ஆன்லைனில் ரிலீஸ் ஆனது இப்படம்.

    உள்ளே ஒரு குரல் சொல்லும்.. இந்த படம் பண்ணலாமா? வேணாமான்னு.. நடிகை நிதி அகர்வால் ஓப்பன் டாக்!உள்ளே ஒரு குரல் சொல்லும்.. இந்த படம் பண்ணலாமா? வேணாமான்னு.. நடிகை நிதி அகர்வால் ஓப்பன் டாக்!

    நாய்க்கு பிரபாகரன் பெயர்

    நாய்க்கு பிரபாகரன் பெயர்

    அதாவது படத்தில், நாய்க்கு பிரபாகரன் என்று பெயருடன் காமெடி காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த பெயரை நாய்க்கு எப்படி வைக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். சீமான், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இயக்குநர் அருண் வைத்தியநாதன்

    இயக்குநர் அருண் வைத்தியநாதன்

    இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்டார் துல்கர் சல்மான். இந்நிலையில் தமிழ் மற்றும் மலையாள படங்களை இயக்கியிருக்கும் பிரபல இயகுநரான அருண் வைத்தியநாதன், குறிப்பிட்ட காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.

    கண்ணியமாக காட்டியிருக்கிறார்கள்

    கண்ணியமாக காட்டியிருக்கிறார்கள்

    அதாவது படத்தில் வேண்டுமென்றே பிரபாகரனை தவறாக சித்தரிக்கவில்லை. இந்த பிரச்சனை தேவையே இல்லை. மலையாளப்படங்களில் அடிக்கடி தமிழர்களை தவறாக சித்தரிப்பதாக கூறப்படும் கருத்துக்களை நான் கேட்கிறேன். அப்படி இல்லை. சமீபத்தில் வெளியான கும்பலங்கி நைட்ஸ் படத்தில் தமிழ் கதாப்பாத்திரத்தை கண்ணியமாக காட்டியிருந்தனர்.

    முருகனை கேலி செய்கிறார்களா?

    முருகனை கேலி செய்கிறார்களா?

    ஆனால் தமிழ் படங்களில் தான் மலையாள பெண்கள் உடை அணிவதை வைத்து இழிவாக காட்டுகிறார்கள். சில தமிழ் படங்களில் மலையாளப்படங்களை ஷகீலாவுடன் ஒப்பிட்டு டயலாக்குகள் உள்ளன. நாய்க்கு பிரபாகரன் என பெயரிப்படுவதால் ஏன் ஒருவர் புண்பட வேண்டும். அவர்கள் லாஜிக்படி பார்த்தால், என்ன கொடுமை சரவணா என்ற டயலாக் மூலம் கடவுள் முருகனை கேலி செய்கிறார்களா?

    லாக்டவுன் போரிங்

    லாக்டவுன் போரிங்

    லாக்டவுனால் போரடித்த மக்கள் சிலர் ஒன்றுமே இல்லாத தேவையற்ற இந்த சர்ச்சையை உருவாக்கி வருகின்றனர் என கூறியிருக்கிறார் இயக்குநர் அருண் வைத்தியநாதன். அருண் வைத்தியநாதன், அச்சமுண்டு அச்சமுண்டு, கல்யாண சமையல் சாதம், நிபுணன் ஆகிய படங்களை தமிழில் இயக்கியிருக்கிறார். மலையாளத்தில் பெருச்சாழி என்ற படத்தை கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Director Arun Vaithiyanathan says Varane Avashyamund unnecessary controversy created by people bored during lockdown. Director Arun Vaithyanathan directed such movies in Tamil and Malayalam industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X