Don't Miss!
- Technology
வந்ததும் ஆப்பு வைத்த Netflix CEO: மொத்த கவனமும் இந்தியர்கள் மீதுதான்.. தொட்டால் கெட்டோம்!
- News
அந்தமான் தீவுக்கு விடுதலைப் புலிகள் மோதலில் வீரமரணம் அடைந்த மேஜர் ராமசாமி பெயரிட்ட பிரதமர் மோடி!
- Sports
"நீ தந்த வெளிச்சத்தில் காதல் கற்றேன்".. கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டி திருமணம்.. நெகிழ்ச்சி பதிவு!
- Finance
Ford நிறுவனத்தின் அதிரடி முடிவு.. 3200 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்.. எங்கு தெரியுமா?
- Lifestyle
உங்க ராசிப்படி சொர்க்கத்தில் உங்களுக்காக நிச்சயிக்கப்பட்ட ஜோடி ராசி எது தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க!
- Automobiles
இந்தியால இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஹெல்மெட் தயாரிக்கல... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா கடைக்கு இப்பவே ஓடுவீங்க!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
ரஜினி சார் உடன் விஜய் அண்ணாவை கம்பேரே பண்ணக் கூடாது.. வாரிசு நடிகர் ஷாம் அதிரடி கருத்து!
சென்னை: நடிகர் விஜய்யை சூப்பர்ஸ்டார் என வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியது. அதே போல தயாரிப்பாளர் தில் ராஜு ஒன் ஒன் ஒன்.. நம்பர் ஒன் என சொன்னதும் ரஜினிகாந்த் ரசிகர்களை கொந்தளிக்கச் செய்தது. இந்நிலையில், நடிகர் ஷாம் இருவரையும் கம்பேர் செய்வது தவறான செயல் என பேசி உள்ளார்.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் சகோதரராக நடிகர் ஷாம் நடித்துள்ளார்.
சமீபத்தில் அவரிடம் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் தான் என ஒரே போடாக போட்டுள்ளார்.
Pathaan Trailer: பட்டாசாய் வெடிக்கும் பதான் ட்ரெய்லர்.. ஷாருக்கானுக்காக விஜய் செய்த சம்பவம்!

நாளை ரிலீஸ்
விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, சங்கீதா, சதீஷ், யோகி பாபு, பிரபு, குஷ்பு மற்றும் எஸ்.ஜே. சூர்யா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள வாரிசு திரைப்படம் நாளை அதிகாலை 4 மணி முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது. வாரிசு படத்தின் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் எவ்வளவு காசு கொடுத்து வேண்டுமானாலும் டிக்கெட் வாங்க ரெடியாகி வருகின்றனர்.

2000 ரூபாய் வரை
வாரிசு மற்றும் துணிவு என இரு திரைப்படங்களும் முதல் நாள் கலெக்ஷனை வாரிக் குவிக்க பிளான் செய்துள்ளன. 200 ரூபாய் விற்க வேண்டிய டிக்கெட் விலை 1000, 1200, 1500 மற்றும் அதிகபட்சமாக சில இடங்களில் 2000 ரூபாய் வரை விற்கப்படுவதாக கூறுகின்றனர். அதிக விலைக்கு வாங்க ரசிகர்கள் இருந்தாலும், முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட்டுகள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.

சூப்பர்ஸ்டார் சர்ச்சை
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் விஜய்யை சூப்பர்ஸ்டார் என பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. பிஸ்மி ஒரு படி மேலே சென்று நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் சூப்பர் ஸ்டார் என பேசி வாங்கிக் கட்டிக் கொண்டார். இந்நிலையில், சூப்பர்ஸ்டார் சர்ச்சை குறித்து நடிகர் ஷாம் பேசிய வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரஜினி சார் லெஜண்ட்
ரஜினி சார் தான் சூப்பர் ஸ்டார். ரஜினிகாந்த், கமல் சார் எல்லாம் லெஜண்ட்ஸ். அவங்க இத்தனை வருஷம் தமிழ் சினிமாவுக்காக எத்தனையோ சாதனைகளை செஞ்சிருக்காங்க.. அவங்களோட லெவலே வேறு, அவர்களுடன் மற்ற நடிகர்களை கம்பேர் செய்வது தவறான விஷயம்னு நான் நினைக்கிறேன் என ஷாம் பேசி உள்ளார்.

கம்பேர் பண்ணக் கூடாது
ரஜினி சாரையும் விஜய் அண்ணாவையும் கம்பேர் செய்வதே தவறு. ரஜினிகாந்த் சாருக்கு உண்டான மரியாதையை ரசிகர்களாக இருக்கட்டும் திரைத்துறையினராக இருக்கட்டும் அனைவரும் கொடுக்கணும் என ஷாம் பேசி உள்ளார்.

இருவருக்கும் ஃபேன் பேஸ்
ரஜினிகாந்த், கமலை விட்டுட்டு பார்த்தோம் என்றால் இப்போதைக்கு இருக்கிற சூழலில் விஜய் அண்ணாவுக்கும் அஜித் சாருக்கும் பெரிய ஃபேன் பேஸ் இருக்கு.. இருவரையுமே சூப்பர் ஸ்டார்னு சொல்ல முடியாது. ப்ரிவியஸ் ஃபிலிம்ஸ் ரெக்கார்டு, பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் வச்சுத்தான் பேசுறாங்க.. அதனால் ரஜினி சாரோட கம்பேர் பண்றது சரியானது கிடையாது என ஷாம் அழுத்தம் திருத்தமாக பேசி உள்ளார்.