வாரிசு நடிகை ராஷ்மிகாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைப்படம் வெளியானது
சென்னை: சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
அடுத்ததாக நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில், சில நாட்களாக உடல் நலக் குறைவு காரணமாக ராஷ்மிகா மந்தனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், மருத்துவர் உடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

நேஷ்னல் கிரஷ்
பெங்களூருவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னடம், டோலிவுட், தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். நேஷ்னல் கிரஷ் என ரசிகர்கள் இந்த புஷ்பா பட நடிகையை கொண்டாடி வருகின்றனர். தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக ஃபேன் ஃபாலோயிங் இன்ஸ்டாகிராமில் இவருக்குத் தான் அதிகம். விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் படத்தில் நடித்து இமிடியேட் பிரபலமானார் ராஷ்மிகா மந்தனா.

தமிழில் அறிமுகம்
ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. சேலை, பாவாடை தாவணி என ஹோம்லி கெட்டப்பில் அந்த படம் முழுக்க வந்த ராஷ்மிகாவை பார்த்து ரசிகர்களும் சிம்புவை போல யாரையும் இவ்ளோ அழகா பார்க்கலன்னு பாடி வந்தனர்.

விஜய்க்கு ஜோடி
புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக விஜய்யின் வாரிசு படத்தில் நடிக்கும் வாய்ப்பை தட்டித் தூக்கினார். வரும் பொங்கலுக்கு ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள வாரிசு திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக காத்திருக்கிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சீதா ராமம் திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்த மாதம் அமிதாப் பச்சன் உடன் இவர் இணைந்து நடித்துள்ள குட் பை திரைப்படமும் திரைக்கு வருகிறது.

உள்ளாடையுடன் கவர்ச்சி
சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை தெரிய படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை அதிகரித்து இருந்தார். தொடர்ந்து ராஷ்மிகாவின் ஹாட் போட்டோக்களாக வெளியாகி வந்த நிலையில், திடீரென அதிர்ச்சி தகவல் ஒன்று பரவத் தொடங்கியது.

மருத்துவமனையில் அட்மிட்
நடிகை ராஷ்மிகா மந்தனா திடீர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தீயாக பரவின. இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார் என்றும் அதற்கான சிகிச்சையை தான் பெற்றுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மருத்துவருடன் புகைப்படம்
வாரிசு படத்தில் படு பிசியாக நடித்து வந்த நிலையில், திடீரென மூட்டு வலி ஏற்பட்ட நிலையில், பிரபல மூட்டு வலி சிகிச்சை நிபுணர் கெளரவ் ரெட்டி என்பவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அவருடன் எடுத்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ரசிகர்கள் பிரார்த்தனை
வாரிசு, புஷ்பா 2 என அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மேலும், தேவையான ரெஸ்ட் எடுங்க தலைவி ஓயாமல் உழைத்தால் இப்படித்தான் பல பிரச்சனைகள் வரும் என்றும் எந்த டான்ஸ் மாஸ்டர் இப்படி பண்ணாரோ தெரியலையேன்னு கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











