ரசிகர்களின் கொண்டாட்டத்தில் வாரிசு, துணிவு... விஜய்யும் அஜித்தும் சேர்ந்து கொடுத்த சர்ப்ரைஸ்...
சென்னை: இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
நேற்று திரையரங்குகளில் வெளியான இரண்டு திரைப்படங்களுக்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.
ஆனாலும் வாரிசு, துணிவு திரைப்படங்களுக்கு முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.
தொடர்ந்து பொங்கல் விடுமுறை இருப்பதால் இரண்டு படங்களின் வசூலும் தாறுமாறாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023 பொங்கல் ரிலீஸ்
இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரிசு, துணிவு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. விஜய் - அஜித்தின் படங்கள் ஒரேநாளில் வெளியானதால், ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு காணப்பட்டது. FDFS டிக்கெட் புக்கிங்கில் இருதரப்பு ரசிகர்களும் அதிக ஆர்வம் காட்டினர். அஜித்தின் துணிவு FDFS நள்ளிரவு 1 ம்ணிக்கும் விஜய்யின் வாரிசு FDFS அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட்டது.

ரசிகர்கள் வரவேற்பு
விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு என இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. முழுக்க முழுக்க பேமிலி சென்டிமெண்டாக உருவாகியுள்ள வாரிசு படத்தில் விஜய்யின் மேனரிசம், ஸ்டைலிஷான லுக் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். அதேபோல், அஜித்தின் துணிவு ஆக்ஷன் ஜானரில் இருப்பதாகவும், வங்கியின் பின்னணியில் நடக்கும் சில சைபர் க்ரைம் சுரண்டல்கள் குறித்து பேசி உள்ளதாகவும் விமர்சனங்கள் வந்தன. இந்தப் படத்தில் அஜித் கம்பேக் கொடுத்துள்ளார் என்றே அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ்
நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ள வாரிசு, துணிவு படங்களின் வசூலும் எதிர்பார்த்தைவிட சிறப்பு என்றே தகவல் கிடைத்துள்ளது. அஜித்தின் துணிவு திரைப்படம் முதல் நாளில் 22 முதல் 25 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், விஜய்யின் வாரிசு திரைப்படமும் 25 முதல் 27 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாம். ஆகமொத்தம் வாரிசு, துணிவு திரைப்படங்கள் சேர்ந்து 47 முதல் 50 கோடி வரை வசூலித்துள்ளது.

விஜய் - அஜித் கொடுத்த சர்ப்ரைஸ்
விஜய் - அஜித் திரைப்படங்கள் ஒரேநாளில் ரிலீஸாவதால் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எப்படி இருக்கும் என திரையரங்க உரிமையாளர்களிடம் அச்சம் இருந்தது. ஆனால், இரண்டுமே ஹிட் கொடுத்துள்ளதால் 2023 ஆரம்பமே அமர்க்களமாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இரண்டு படங்களும் தனித்தனியாக இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கவில்லை என்றாலும், இரண்டும் சேர்ந்து 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளன. இது மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 2023ம் ஆண்டில் பொங்கல் வெளியீடாக ரிலீஸான வாரிசும் துணிவும் சேர்ந்து முதல் நாளில் 50 கோடி வசூலித்துள்ளது, கோலிவுடுக்கு சர்ப்ரைஸ்ஸாகவே அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











