வாரிசு இசை வெளியீட்டு விழா.. லைவ் செய்யப்படுகிறதா? அதுவும் அந்த சேனலிலா? அப்போ அது கன்ஃபார்ம் தான்!

சென்னை: நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

"என் நெஞ்சில் குடியிருக்கும்" என விஜய் பேசுவதை கேட்க ஒட்டுமொத்த திரையுலகமும் தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா லைவாக ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பீஸ்ட் படத்துக்கு இல்லை

பீஸ்ட் படத்துக்கு இல்லை

2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய் பட இசை வெளியீட்டு விழா என்றே வாரிசு வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஆண்டு வெளியான பீஸ்ட் படத்துக்கு இசை வெளியீட்டு விழாவே நடைபெறவில்லை. அதற்கு பதிலாக சன் டிவியில் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் நெல்சன் பங்கேற்ற பேட்டி மட்டுமே ஒளிபரப்பானது.

குட்டி ஸ்டோரி கேட்க ரெடியா

குட்டி ஸ்டோரி கேட்க ரெடியா

இந்நிலையில், வரும் டிசம்பர் 24ம் தேதி கிறிஸ்துமஸ்க்கு முந்தைய தினம் நடிகர் விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது. மாலை 4 மணிக்கு வாரிசு இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

அவசரப்பட்ட ராஜு பாய்

அவசரப்பட்ட ராஜு பாய்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகன் டிசம்பர் 24ம் தேதி இசை வெளியீட்டு விழா என்றும் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறேன் என்றும் அறிவித்து விட்டார். ஆனால், உடனடியாக அந்த ட்வீட்டை அவர் டெலிட் செய்தது குறிப்பிடத்தக்கது.

சன் டிவியில் லைவா?

சன் டிவியில் லைவா?

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சன் டிவியில் லைவ் டெலிகாஸ்ட் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இதற்கு முன் நடிகர் விஜய் பேசிய இசை வெளியீட்டு விழா எல்லாமே சன் டிவியில் வெளியான நிலையில், இந்த முறையும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த படம் கன்ஃபார்ம்

அடுத்த படம் கன்ஃபார்ம்

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப் போவதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் தீயாய் பறந்த நிலையில், அதை உறுதி செய்யும் விதமாக மீண்டும் சன் டிவியிலேயே வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக கூறுகின்றனர். லைவ் இல்லை என்றாலும், வரும் புத்தாண்டுக்கு வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சன் டிவியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய விரைவில் அது தொடர்பான அறிவிப்பும் வெளியாகலாம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X