Don't Miss!
- Sports
19வது ஓவர் வரை கெத்து காட்டிய இந்தியா.. கடைசி 6 பந்தில் 27 ரன்கள்.. ஏமனாக மாறிய ஆர்ஸ்தீப் சிங்
- News
"சீனே மாறிடுச்சே".. ஒருத்தருமே கிட்ட இல்லயாம்.. தனித்து விடப்பட்டாரா சசி.. காரணமே "அவர்"தான் போலயே
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Finance
இந்தியா-வை தேடி வரும் உலக நாடுகள்.. டாலர்-க்கு செக்.. அமெரிக்கா திண்டாட்டம்..!
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
அதெல்லாம் கம் போட்டு ஒட்டிக்கலாம் அம்மா.. வாரிசு பட வசனத்தை வைத்தே டிரெண்டாகும் வீடியோ மீம்!
சென்னை: பூவே உனக்காக படம் தான் தனக்கு ரொம்ப பிடித்த விஜய் படம் என பேசிய இயக்குநர் வம்சி அந்த படத்தின் கிளைமேக்ஸ் வசனத்தை விஜய்யை வைத்தே ட்ரோல் செய்வது போல காதல் என்பது பூ போல உதிர்ந்து விட்டால் ஒட்ட வைக்க முடியாது என யோகி பாபுவை பேச வைத்து விட்டு அதெல்லாம் கம் போட்டு ஒட்டிக்கலாம் என விஜய்யை பேச வைத்துள்ளார்.
அந்த வசனத்தை வைத்தே படத்தின் கிளைமேக்ஸையே இப்போ வீடியோ மீம் போட்டு முடித்துள்ளனர்.
விஜய்யின் அம்மாவாக நடித்துள்ள ஜெயசுதா பேசும் அந்த வசனத்துக்கும் இதே பதிலை எடிட் செய்து போட்டு கலாய்த்து வருகின்றனர்.
வாரிசு
ட்ரெய்லர்
ரிலீஸ்..
பட்டாசு
வெடித்து
கொண்டாடிய
விஜய்
ரசிகர்கள்..
என்னவொரு
ரசிகர்
படை!

யங் அண்ட் எனர்ஜி
வாரிசு படத்தின் ட்ரெய்லரில் நடிகர் விஜய் யங் அண்ட் எனர்ஜியாக இப்பவும் கடைக்குட்டி மகனாக நடிப்பது எல்லாமே ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான். ஸ்க்ரீன் பிரெசன்ஸில் ஒவ்வொரு காட்சியிலும் பக்காவாக காட்சியளித்து தனது ரசிகர்களை செம ஹாப்பி ஆக்கி உள்ளார் விஜய். ஒளிப்பதிவாளர் கார்த்தி பழனியை ஏன் ஆடியோ வெளியீட்டு விழாவில் அப்படி பாராட்டினார் விஜய் என்பதற்கு ட்ரெய்லர் சிறந்த காரணத்தை தெரிவித்துள்ளது.

துணிவு சாதனை முறியடிப்பு
வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே 1 மில்லியன் லைக்ஸ் கடந்து துணிவு சாதனையை முறியடித்தது. இதுவரை 1.7 மில்லியன் லைக்ஸ் வந்துள்ள நிலையில், 2 மில்லியன் லைக்ஸை 24 மணி நேரத்தில் சர்வ சாதாரணமாக கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 30 மில்லியன் வியூஸை கடக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏகப்பட்ட ட்ரோல்
வாரிசு ட்ரெய்லரை பார்த்து விட்டு மோசமாக அஜித் ரசிகர்களே கலாய்க்க முடியவில்லை என விட்டு விட்டனர். அந்த அளவுக்கு படத்தின் ப்ரொடக்ஷன் வேல்யூ காட்சிக்கு காட்சி பிரம்மாண்டமாக விரிகிறது. ஆனாலும், இந்தி சீரியல் மாதிரி இருக்கு என்றும் தெலுங்கு படங்களின் மிக்சர் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

பூவே உனக்காக வசன ட்ரோல்
விஜய் நடிப்பில் வெளியாகி முதன் முதலில் அவர் பக்கம் அதிக ரசிகர்களை ஈர்த்த படம் என்றால் அது பூவே உனக்காக படம் தான். இந்த படமும் அதே போலத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பூ உதிர்ந்துட்டா அவ்வளவு தான் என யோகி பாபு சொல்ல, அதையெல்லாம் கம் போட்டு ஒட்ட வைத்துக் கொள்ளலாம் என விஜய் பண்ணும் காமெடியை க்ரிஞ்ச் காமெடி என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

குடும்பம் உடையுது
வாரிசு படத்தில் மூத்த அண்ணனான ஸ்ரீகாந்த் அவரது மனைவி சங்கீதா மற்றும் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறுவது மற்றும் ஷாம் அவரது மனைவி பிக் பாஸ் சம்யுக்தா மற்றும் குழந்தைகளுடன் வெளியேறுவது என காட்சிகள் செல்லும் போது அம்மா ஜெயசுதா என் கண் முன்னாலே என் குடும்பம் இப்படி உடையுதே என உருக்கமாக பேசியிருப்பார்.
|
கம் போட்டு ஒட்டிக்கலாம் அம்மா
அந்த காட்சியுடன் நடிகர் விஜய் அதெல்லாம் கம் போட்டு ஒட்டிக்கலாம் என பேசியதை கட் பண்ணிப் போட்டு செம சின்க் ஆக்கி உள்ள வீடியோ மீம் தற்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. ஒட்டுமொத்த படத்தையும் வாரிசு படத்தில் விஜய் பேசிய ஒரே வசனத்தை வைத்தே முடிச்சிட்டீங்களே என விஜய் ரசிகர்களே இந்த மீமை ரசித்து வருகின்றனர்.