Don't Miss!
- News
"பிஜேபி B டீம்".. நாம் தமிழர் கட்சி "மேனகா"வின் கணவர் பாஜக நிர்வாகியா.. நவநீதன் ஆவேச மறுப்பு.. பரபர
- Technology
ரூ.16,000-க்கு கீழ் அசத்தலான 40-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க விருப்பமா? இதோ பட்டியல்.!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: வருமான வரி குறைப்பால் எவ்வளவு பணம் மிச்சம்..!
- Lifestyle
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
- Automobiles
இதுகளோட வருகைக்குதான் ரொம்ப நாளா வெயிட் பண்றோம்! டூவீலர் லவ்வர்ஸ்க்கு இந்த மாசம் செம்ம தீனி காத்திட்டு இருக்கு
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாரிசு படத்திற்கு வந்த புது சிக்கல்..ரிலீஸ் தேதி மாற்றம்..குழப்பத்தில் விநியோகஸ்தர்கள்!
சென்னை : நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்திற்கு புது சிக்கல் வந்துள்ளதால் அமெரிக்கா, கனடாவில் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு , சுமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் பொங்கல் பாண்டியையொட்டி ஜனவரி 11ந் தேதி வெளியாக உள்ளது.
சூப்பர்ஸ்டார் விஜய்.. இந்தியாவிலேயே சிறந்த டான்சர்.. சீமான் பேச்சு.. ப்ளூசட்டை மாறன் ட்ரோல்!

விஜய்யின் வாரிசு
பிரபல தெலுங்கு இயக்குனரும், தமிழில் தோழா படத்தை இயக்கியவருமான வம்சி இயக்கத்தில் உருவாகி உள்ள வாரிசு, தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் வாரிசுடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது. குடும்பம், செண்டிமெட் , காதல் என டிரைலரில் அனைத்தும் உள்ளதால், இத்திரைப்படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புது சிக்கல்
இந்த நிலையில் வாரிசு படம் வெளியாவதில் ஒரு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது. வாரிசு படத்திற்கு அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் சென்சாருக்கு அனுப்பியுள்ள நிலையில் அக்குழுவினர் படத்தை ரிஜெக்ட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பிரதி முழுமையாக தயாராகவில்லை என்ற காரணத்தினால் சென்சார் போர்டு படத்தை ரிஜெக்ட் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இரு நாடுகளில் பிரீமியர் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.

வெளியாவதில் சிக்கல்
இதனால் வாரிசு திரைப்படம் அறிவித்த தேதியில் அங்கு வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இந்தியாவில் தமிழ் பதிப்பு மட்டும் வெளியாக இருப்பதாகவும், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தெலுங்கு பதிப்பு இன்னும் தயாராகவில்லை என்றும் அதற்கான தணிக்கைக்குழு வரும் திங்கட்கிழமையே நடைபெறவுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

குழப்பதில் படக்குழு
இந்த குழப்பத்தின் காரணமாக வரும் 11ஆம் தேதி வெளியாகவுள்ள வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பு, வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனால், வாரிசு படக்குழு என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாக கூறப்படுகிறது.