தூள் கிளப்பும் சில்லா சில்லா... சீக்கிரமே தொடங்கும் வாரிசு டிக்கெட் புக்கிங்... இதுதான் காரணமா?
லண்டன்: விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகின்றன.
விஜய் - அஜித் படங்கள் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இருதரப்பு ரசிகர்களும் பயங்கரமான உற்சாகத்தில் உள்ளனர்.
துணிவு படத்தில் இருந்து முதல் பாடலான சில்லா சில்லா நேற்று வெளியான நிலையில், வாரிசு படக்குழு அடுத்த அதிரடிக்கு ரெடியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

களைகட்டும் பொங்கல் ரிலீஸ்
பண்டிகை காலங்களில் புதிய திரைப்படங்களின் ரிலீஸ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஒன்றாகும். அந்த வரிசையில் வரும் பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் ரிலீஸாகின்றன. கோலிவுட்டின் டாப் ஹீரோக்களான விஜய்யும் அஜித்தும் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் பொங்கல் ரேஸில் மோதவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இரண்டு படங்களுக்குமே தமிழ்நாட்டில் சமமான திரையரங்குகள் ஒதுக்கப்படும் என திரையரங்க உரிமையாள்ர்கள் கூறி வருகின்றனர்.

தீ தளபதி - சில்லா சில்லா
வாரிசு படத்தில் இருந்து ஏற்கனவே முதல் பாடலான ரஞ்சிதமே ரஞ்சிதமே வெளியாகி ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் சிம்புவின் குரலில் தீ தளபதி பாடலும் ரிலீஸாகி இணையத்தை தெறிக்கவிட்டது. இந்நிலையில், துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளும் நேற்று மாலை வெளியாகி மாஸ் காட்டியுள்ளது. ஜிப்ரான் இசையில் அனிருத் பாடியுள்ள 'சில்லா சில்லா' பஞ்ச் வசனங்களுடன் தூள் கிளப்பி வருகிறது. இன்னொரு பக்கம் அஜித் - விஜய் இருவரில் யார் வெயிட் என்ற போட்டியை இருதரப்பு ரசிகர்களும் பேனர் வைத்து காட்டி வருகின்றனர்.

வாரிசு டிக்கெட் புக்கிங்
இந்நிலையில், சில்லா சில்லா பாடலுக்கு டஃப் கொடுக்கும் வகையில், வாரிசு டீம் அதிரடியாக ஒரு முடிவெடுத்துள்ளதாம். வாரிசு திரைப்படத்தை இங்கிலாந்தில் வெளியிடும் அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், ஜனவரி 12ம் தேதி FDFS கன்ஃபார்ம் என அறிவித்திருந்தது. இப்போது மேலும் ஒருபடி சென்று வாரிசு படத்திற்கான டிக்கெட் புக்கிங்கை உடனடியாக தொடங்கவுள்ளதாம். அதாவது 4 வாரங்களுக்கு முன்னதாகவே வாரிசு படத்திற்கான அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங்கை ஓப்பன் செய்ய உள்ளார்களாம். இதனால், லண்டனில் உள்ள விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ் மூலம் நெருக்கடி
4 வாரங்களுக்கு முன்னரே வாரிசு டிக்கெட் புக்கிங் ஓப்பன் செய்துவிட்டால், அதுவே இந்தப் படத்தின் ப்ரோமோஷனாகிவிடும். அதுமட்டும் இல்லாமல் டிக்கெட் புக்கிங் அதிகரிக்கும் நிலையில், படம் வெளியாகும் முன்பே பாக்ஸ் ஆபிஸில் வாரிசு டாப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அஜித்தின் துணிவு படத்திற்கு நெருக்கடி வரும் என சொல்லப்படுகிற்து. மேலும், லண்டனில் வாரிசு படத்திற்கான டிக்கெட் புக்கிங் வேகமாக நடந்து முடிந்துவிட்டால், அது தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும் என சினிமா ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை எந்தப் படங்களுக்கும் இல்லாத வகையில் 4 வாரங்களுக்கு முன்பே வாரிசு படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கவுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











