'வாரிசு' டைட்டில் செய்த மேஜிக்...51 வயதில் தில்ராஜுவுக்கு பிறந்த வாரிசு

ஐதராபாத் : தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் தில் ராஜு. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் பேனரில் பல பெரிய நடிகர்களின், மெகா பட்ஜெட் படங்களை இயக்கி உள்ளார்.

தற்போது விஜய் நடிப்பில் வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு, ராம் சரண் நடிப்பில் டைரக்டர் ஷங்கர் இயக்கும் ஆர்சி 15 என தற்காலிமாக பெயரிடப்பட்ட படம் ஆகியவற்றை தயாரித்து வருகிறார். இந்த இரு படங்களும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது.

தில் ராஜு என அனைவராலும் அறியப்படும் இவரின் நிஜப் பெயர், வெலமகுசா வெங்கட ரமணா என்பதாகும். இவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 51 வயதாகும் தில் ராஜு இரண்டாவது முறையாக அப்பா மகிழ்ச்சியில் இருந்து வருகிறார். ஏற்கனவே இவருக்கு முதல் மனைவி மூலம் ஹன்சிதா ரெட்டி என்ற மகள் உள்ளார். அவர் 2017 ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

 Varisu producer Dil Raju welcomes baby boy at 51

அதற்கு பிறகு 2020 ம் ஆண்டு தேஜஸ்வினி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதற்காக தில் ராஜு மற்றும் தேஜஸ்வினி ஆகியோருக்கு பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இரண்டாவது திருமணத்திற்கு பிறகு தில் ராஜு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், உலகம் ஸ்தம்பித்த நிலையில் தொழில் ரீதியாகவும் பெரும்பாலான விஷயங்கள் சிறப்பாக அமையவில்லை. இப்போது எனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த உள்ளேன். கடினமான நேரங்களை கடக்க நினைக்கிறேன். விரைவில் அனைத்து சரியாகி விடும் என நம்புகிறேன். அந்த நம்பிக்கையின் உற்சாகத்தில் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை துவக்குகிறேன். வாழ்க்கையில் மகிழச்சியான முக்கிய தருணம் இது என குறிப்பிட்டிருந்தார்.

அதே போல் இரண்டாவது திருமணத்திற்கு பிறகு தில் ராஜுவின் தொழிலும் வளர்ச்சி அடைய துவங்கியது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பல படங்களை தயாரிக்க துவங்கினார். தற்போது தங்கள் நிறுவனத்தின் 50 வது படத்தையும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் ஆர்சி 15 படம் தான் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்சின் 50வது தயாரிப்பாகும்.

விஜய் நடிக்கும் படத்திற்கு வாரிசு என டைட்டில் வைத்த ராசி தான் தயாரிப்பாளருக்கு நிஜமாகவே ஆண் வாரிசு வந்துள்ளது என பலரும் குறிப்பிட்டு சோஷயில் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தில் ராஜுவிற்கு விஜய் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X