Don't Miss!
- News
"தனித்து நிற்போம்".. கட்டம் கட்டும் எடப்பாடி டீம்.. பாஜகவை கழற்றிவிட பிளான்? என்ன நடக்குது கேம்பில்?
- Technology
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அடடா இப்படி ஆயிடுச்சே... வாரிசு பட பிரபலம் திடீர் மறைவு... அதிர்ச்சியில் படக்குழு...
சென்னை:
விஜய்
நடித்துள்ள
வாரிசு
திரைப்படம்
பொங்கலை
முன்னிட்டு
வரும்
11ம்
தேதி
வெளியாகிறது.
நேற்று
முன்தினம்
வெளியான
வாரிசு
ட்ரெய்லர்
ரசிகர்களிடம்
படம்
மீதான
எதிர்பார்ப்பை
அதிகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,
வாரிசு
பட
பிரபலம்
மாரடைப்பு
காரணமாக
திடீரென
உயிரிழந்தது
படக்குழுவினரை
அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.
இன்னும்
ஐந்தே
நாட்களில்
வாரிசு
ரிலீஸாகவுள்ள
நிலையில்,
இந்த
சம்பவம்
ரசிகர்கள்
மத்தியிலும்
சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.
வாரிசு
ட்ரெய்லர்
32
மில்லியன்
வியூஸ்..
நாங்க
தான்
நம்பர்
ஒன்..
இது
உலகமகா
உருட்டா
இருக்கே!

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வாரிசு
விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலை முன்னிட்டு வரும் 11ம் தேதி வெளியாகிறது. வாரிசுக்குப் போட்டியாக அஜித்தின் துணிவும் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இதனால் விஜய், அஜித் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனிடையே வாரிசு, துணிவு படங்களின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. இதனால் வாரிசு படக்குழு தரப்பில் புரோமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், அதிர்ச்சிகரமான சோகம் ஒன்றும் நடந்துள்ளது.

வாரிசு பட பிரபலம் மரணம்
வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜூ தயாரித்துள்ள வாரிசு திரைப்படம், தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. விஜய்யுடன் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு தமன் மியூசிக் கம்போஸ் செய்துள்ளார். அதேபோல் புரோடக்ஷன் டிசைனராக சுனில் பாபு என்பவர் பணிபுரிந்துள்ளார். முன்னணி கலை இயக்குநரான சாபு சிரிலிடம் உதவியாளராக இருந்த சுனில் பாபு, வாரிசு படத்தின் புரோடக்ஷன் டிசைனராக வேலை பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.

அதிர்ச்சியில் வாரிசு படக்குழு
50 வயதான சுனில் பாபு உயிரிழந்தது விஜய் உட்பட வாரிசு படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் மிகப் பெரிய திரைப்படங்களுக்கு கலை இயக்குநராக பணிபுரிந்துள்ளவர் சுனில் பாபு. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள வாரிசு படத்திலும் இவரது ஓர்க் பிரமிக்க வைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், சுனில் பாபு மறைவுக்கு வாரிசு படக்குழுவினர் உள்ளிட்ட திரை பிரபலங்கல் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திரையுலகிற்கு பெரும் இழப்பு
சுனில் பாபு உருமி, இந்தியில் வெளியான கஜினி, தோனி பயோபிக், விஜய்யின் துப்பாக்கி, மலையாளத்தில் பிரேமம் உட்பட ஏராளமான படங்களில் பணியாற்றியுள்ளார். சுனில் பாபுவின் மறைவு, திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பு என பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வாரிசு திரைப்படம் இன்னும் ஐந்தே நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், சுனில் பாபு உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபாஸ் டீம் இரங்கல்
இதனிடையே சுனில் பாபு மறைவுக்கு வைஜெயந்தி மூவிஸ் இரங்கல் தெரிவித்து ட்விட் செய்துள்ளனர். தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ள வைஜெயந்தி பிலிம்ஸ், தற்போது பிரபாஸ் நடிக்கும் ப்ராஜக்ட் கே படத்தை தயாரித்து வருகிறது. இந்த கம்பெனியின் படங்களில் சுனில் பாபு வேலை பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சுனில் பாபு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள வைஜெயந்தி பிலிம்ஸ்.