வாரிசு செகண்ட் சிங்கிள்… விஜய்யின் மாஸ் ப்ளான்… ஜானி மாஸ்டர் அவுட்… உள்ள வந்தது யார்ன்னு தெரியுமா?
சென்னை: விஜய்யின் 'வாரிசு' திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகிறது.
வாரிசு படத்தின் முதல் பாடல் 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், அனிருத் குரலில் விரைவில் வெளியாகவுள்ள வாரிசு செகண்ட் சிங்கிள் குறித்து புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள்
விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ளார். விஜய்யுடன் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் அதிகம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், ரசிகர்கள் நீண்ட நாள்களாக காத்திருந்த வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' கடந்த வாரம் வெளியானது. தமன் இசையில் விஜய் பாடியுள்ள 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' பாடல் Folk ஸ்டைலில் உருவாகியுள்ளது.

விரைவில் செகண்ட் சிங்கிள்
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் விஜய் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றாலும், நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். விஜய் மட்டுமே ஸ்டைலிஷாக இருக்கிறார், மற்றபடி பாட்டு மொத்தமும் காப்பி என கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர். ஒரு பாடலில் இருந்து காப்பி அடித்தால் தெரிந்துவிடும் என பல பாடல்களையும் சேர்த்து மிக்ஸிங் செய்து தமன் கம்போஸ் செய்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால், உடனடியாக வாரிசு செகண்ட் சிங்கிளை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இந்தப் பாடல் கண்டிப்பாக மாஸ் சாங்காக இருக்கும் என சொல்லப்படுகிறது.

விஜய்யின் மாஸ் ப்ளான்
வாரிசு செகண்ட் சிங்கிளை அனிருத் பாடியுள்ளது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. மேலும், இந்தப் பாடல் தான் விஜய்யின் இண்ட்ரோ சாங்காக இருக்கும் என சொல்லப்படுகிறது. துணிவு படத்தில் அஜித்தின் இண்ட்ரோ சாங்கை அனிருத் பாடியுள்ள நிலையில், இப்போது வாரிசு படத்தின் விஜய் என்ட்ரியும் அனிருத் குரலில் தான் வெளியாகும் என்ற தகவல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், இந்தப் பாடலுக்கு பிரபுதேவா கோரியோகிராபி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஞ்சிதமே பாடலில் ஜானி மாஸ்டரின் கோரியோகிராப்பும் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது.

தெறிக்க விடுமா செகண்ட் சிங்கிள்
வாரிசு படம் தொடங்கும் போதே இந்தப் படத்தில் பிரபுதேவா மாஸ்டரின் கோரியோகிராபி இருக்க வேண்டும் என விஜய் விரும்பினாராம். தெலுங்கில் அல்லு அர்ஜுன், ராம் சரண், ஜூனியர் என்டிஆர் போன்ற நடிகர்களின் டான்ஸ் வெறித்தனமாக இருக்கும். அதனால் அவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வாரிசு பாடல்கள் இருக்க வேண்டும் என விஜய் முடிவு செய்துவிட்டாராம். அதனால், வாரிசு இன்ட்ரோ சாங் பிரபுதேவாவின் கோரியோகிராபில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளதால், இரண்டாவது பாடல் ஆறுதலாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே, அஜித்தின் துணிவு படத்தின் முதல் பாடலும் விரைவில் வெளியாகவுள்ளதாம். இந்தப் பாடலையும் அனிருத் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











