வெளியானது விஜய்யின் கெத்தான வாரிசு போஸ்டர்… அடுத்த வாரத்துல இருந்து சும்மா பட்டாசா இருக்குமாம்…

சென்னை: விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த போஸ்டர் விஜய் ரசிகர்களுக்காகவே ஸ்பெஷலாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

விஜய்யின் செம்ம ஸ்டைலான போஸ்டருடன் இன்னும் மாஸான அப்டேட்களையும் படக்குழு கொடுத்துள்ளது.

விஜய்யின் ஸ்டைலிஷ் போஸ்டர்

விஜய்யின் ஸ்டைலிஷ் போஸ்டர்

விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு விஜய்யின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ப்ளாக் & ப்ளாக் பேண்ட் சர்ட்டில் கையில் சுத்தியுடன் செம்ம ஸ்டைலிஷாக ஆக்‌ஷன் மோடில் விஜய் நடந்து வரும் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் இந்த போஸ்டரை பயங்கரமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர். விஜய்யின் போஸ்டருடன் இன்னும் தரமான இரண்டு அப்டேட்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

ஹேப்பி தீபாவளி நண்பா

ஹேப்பி தீபாவளி நண்பா

வாரிசு படத்தின் விஜய் போஸ்டரை 'ஹேப்பி தீபாவளி நண்பா' என்ற கேப்ஷனுடன் பாஸ் ரிட்டர்ன்ஸ் என படக்குழு குறிப்பிட்டுள்ளது. மேலும், வாரிசு பொங்கல் ரிலீஸையும் கன்ஃபார்ம் செய்துள்ளது. ஆனால், அதில் ரிலீஸ் தேதி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. முக்கியமாக "அடுத்த வாரம் முதல் சும்மா பட்டாசா இருக்கும்" என லீட் கொடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இது கண்டிப்பாக வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் தான் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

ஃபர்ஸ்ட் சிங்கிள்

ஃபர்ஸ்ட் சிங்கிள்

ஏற்கனவே வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், அதுகுறித்து படக்குழு எதுவும் அப்டேட் கொடுக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது அதுகுறித்து சின்னதாக லீட் கிடைத்துள்ளது. வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிளை விஜய் பாடியிருப்பதாகவும், அது யூத் படத்தில் இடம்பெற்ற ஆல்தோட்ட பூபதி பாடலின் ரீமிக்ஸாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், டைட்டில் டீசரும் விரைவில் வெளியாகலாம் என அப்டேட் கிடைத்துள்ளது.

ப்ரீ ரிலீஸ் பிசினஸ்

ப்ரீ ரிலீஸ் பிசினஸ்

இந்நிலையில், வாரிசு படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வாரிசு ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் 60 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், சாட்டிலைட் உரிமையை சன் டிவி 50 கோடிக்கு பேசி முடித்துவிட்டதாம். இந்தி டப்பிங் உரிமை 32 கோடி ரூபாய்க்கும், ஓவர்சீஸ் உரிமை 32 கோடி ரூபாய்க்கும் முடிந்துள்ளது. அதேபோல், ஆடியோ உரிமையை T-Series நிறுவனம் 10 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், எஸ்ஜே சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கும் வாரிசு படத்தை வம்ஷி பைடிபள்ளி இயக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X