துணிவு VS வாரிசு: ட்ரெய்லர் கருத்துக் கணிப்பில் முன்னணியில் இருப்பது யார்? ரசிகர்கள் தீர்ப்பு இதோ

சென்னை: விஜய்யின் வாரிசு, அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகின்றன.
ஏற்கனவே கடந்த வாரம் துணிவு ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களுக்கு ஆக்சன் ட்ரீட் கொடுத்திருந்தது.
இப்போது துணிவு ட்ரெய்லருக்குப் போட்டியாக விஜய்யின் வாரிசு பட ட்ரெய்லரும் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

பேமிலி சென்டிமெண்ட் ப்ளஸ் ஆக்சன் என விஜய் செம்ம ஸ்டைலிஷாக மாஸ் காட்டியுள்ளார்.

வெளியானது வாரிசு ட்ரெய்லர்

வெளியானது வாரிசு ட்ரெய்லர்

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், குஷ்பு, எஸ்ஜே சூர்யா, யோகிபாபு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே வாரிசு படத்தில் நடித்துள்ளது. இந்நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாரிசு ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ரிலீஸானது முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ட்ரெய்லர், தொடர்ந்து சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

துணிவு ட்ரெய்லர் ஆக்‌ஷன் மேளா

துணிவு ட்ரெய்லர் ஆக்‌ஷன் மேளா

முன்னதாக அஜித்தின் துணிவு ட்ரெய்லரும் கடந்த வாரம் வெளியானது. ஹெச் வினோத்தில் அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜிஎம் சுந்தர், பிரேம் உள்ளிட்ட பலரும் துணிவு படத்தில் நடித்துள்ளனர். கடந்த வாரம் வெளியான 31ம் தேதி ரிலீஸான துணிவு ட்ரெய்லர் நான்கே நாட்களில் 46 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. முழுக்க முழுக்க அதிரடி ஆக்‌ஷன் ட்ரீட்டாக அமைந்த துணிவு ட்ரெய்லரில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளது உறுதியாகியுள்ளது.

கருத்துக் கணிப்பு

கருத்துக் கணிப்பு

முதலில் அஜித்தின் துணிவு ட்ரெய்லர் மட்டும் வெளியாகி இருந்தது. தற்போது விஜய்யின் வாரிசு ட்ரெய்லரும் ரிலீஸாகிவிட்டதால் ரசிகர்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். பொங்கலுக்கு எந்தப் படத்தை முதலில் பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் கருத்தும் வைரலாகி வருகிறது. இரண்டு படங்களின் ட்ரெய்லரும் கதைக்களம் என்னவென்பதை தெளிவாக உறுதிப்படுத்திவிட்டன. வாரிசு முழுக்க முழுக்க பேமிலி சென்டிமெண்ட் நிறைந்த படமாகவும், அதேநேரம் விஜய் ரசிகர்களுக்கான ஆக்‌ஷனுக்கும் பஞ்சமில்லாத ஒன்றாகவும் இருக்கும் என கமெண்ட்ஸ்கள் வைரலாகின்றன.

ஃபேன் பாய் சம்பவம்

ஃபேன் பாய் சம்பவம்

அதேபோல் அஜித்தின் துணிவு ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ளதால், இது முழுக்க முழுக்க பேன் பாய் சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மங்காத்தா படத்திற்கு பின்னர் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளது இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ஆனாலும் பொங்கல் பண்டிகைக்கு ஃபேமிலி ஆடியன்ஸின் அதிக எதிர்பார்ப்பு வாரிசு படத்திற்கு தான் இருக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இரண்டு படங்களும் வெளியான பின்னரே ரசிகர்களின் வரவேற்பு, விமர்சனங்களை பொறுத்து கள நிலவரம் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X