Don't Miss!
- Sports
BBL டி20 லீக் - 19 வயது வீரர் செய்த சம்பவம்.. 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெர்த் அணி
- News
அசாமில் குழந்தை திருமணம்: கைது பண்ணுறது சரி..கைதானவர்களின் மனைவி, பிள்ளைகளுக்கு யார் பொறுப்பு..ஒவைசி
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாரிசா..? துணிவா..? இந்த காரணத்திற்காக இரண்டு படத்தையும் அவசியம் பாருங்க!
சென்னை: சோஷியல் மீடியாவில் அதிகம் விவாதிக்கப்படுவது வாரிசா..? துணிவா..? என்ற டாப்பிக்குதான். பல யூடியூப் சேனல்கள் இதுகுறித்து விவாதமே நடத்தத் தொடங்கிவிட்டனர்.
2014ம் ஆண்டு விஜய் நடித்த ஜில்லா திரைப்படமும், அஜித் நடித்த வீரம் படமும் பொங்கலுக்கு வெளியானது. தற்போது 8 ஆண்டுக்கு பிறகு விஜய், அஜித் நடித்த திரைப்படம் பொங்கல் திருநாளில் ரிலீஸாக உள்ளது.
அஜித் மற்றும் விஜய் நண்பர்களாக இருந்தாலும் , அவர்களது ரசிகர்கள்,தலயா, தளபதியா இரண்டுல ஒன்று பார்த்துவிடலாம் என இணையத்தை திணறவிட்டு வருகின்றனர். இரண்டுல ஒன்னு எதுக்குங்க நாம பாக்கணும், இரண்டு படத்தையும் ஜாலியா பார்க்க இந்த காரணங்கள் போதாதா?

ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்
இந்த பொங்கல் பண்டிகை விஜய் மற்றும் அஜித் என இரு ரசிகர்களுக்கும் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இயக்குனர் எச்.வினோத் இயக்கிய துணிவு ஜனவரி 11ம் தேதியும், விஜய்யின் வாரிசு படம் ஜனவரி 12ம் தேதியும் வெளியாகிறது. ஒரே நாளில் டிக்கெட்டுக்காக அலையாமல் மக்கள் வெவ்வேறு நாட்களில் இந்தப் படங்களைப் பார்க்கலாம். இதுவே ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்.

இரண்டும் வேற வேற கதை
துணிவு படத்தின் டிரைலரை பார்க்கும் போது, இது ஒரு அதிரடியான திரைப்படமாக உள்ளது. வங்கிக்குள் ஒரு கும்பல் புகுந்து பணத்தை கொள்ளையடிக்கிறது. அதே போல விஜய்யின் வாரிசு படம் மல்டி ஸ்டார் திரைப்படமாகும். அதில், சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம், எஸ்ஜே சூர்யா, குஷ்பு என பலர் நடித்துள்ளனர். இந்த படம் குடும்ப உறவுகளை பற்றிய ஒரு உணர்ச்சிகரமான கதை அம்சத்தை கொண்ட படமாகும்.

வாரிசுல காதல்..துணிவு அதிரடி
துணிவு படத்தை பொறுத்தவரை இப்படத்தில் அஜித்திற்கு ஜோடி இல்லை. மஞ்சு வாரியர் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தாலும், காதலும் இல்லை, ரொமான்சும் இல்லை இதுதான் எச் வினோத்தின் தனி ஸ்டைல். ஆனால்,வாரிசு படத்தில் நம்ம நேஷ்னல் க்ரஷ் ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் , காதல், டூயட் என அனைத்தும் கலந்த ஒரு கமர்ஷியல் படம்.

பாட்டும் டான்சும் சூப்பர்
விஜய் படத்தில் எப்போதும் பாட்டும், டான்சும் அசத்தலாகவே இருக்கும் அதே போல வாரிசு படத்தில் ரஞ்சிதமே ரஞ்சிதமே, தீ தளபதி, அம்மா பாடல் என அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்து விட்டது. அதே போல ரஞ்சிதமே பாடலுக்கு விஜய் போட்ட ஆட்டமும் சூப்பர். அஜித்தின் துணிவு படத்தில் ஜிப்ரானின் இசையில் சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டரா பாடல்கள் பட்டையை கிளப்பியது. அதுவே இந்தப் படங்களை பார்க்க முக்கியமான காரணமாக உள்ளது.

இயக்குநர்களின் டச்
வாரிசு என்பது தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளியின் முதல் தமிழ் படம், இது எப்படி இருக்கும் என்று பார்க்க பலர் ஆர்வமாக உள்ளனர். அவர் தனக்கென தனித்துவமான ஸ்டைலை வைத்துள்ளார். மகேஷ் பாபுவின் மகரிஷி படத்திற்கு பிறகு விஜய்யுடன் இணைந்துள்ளார். இயக்குநர் எச்.வினோத்தின் வித்தியாசமான பார்வைக்கு துணிவு தீணிப்போடும் படமாக உள்ளது. இரண்டு படங்களுமே வெவ்வேறு ஜானர்... வெவ்வேறு கதைக்களம்.