Don't Miss!
- Sports
ஹர்திக் பாண்ட்யாவின் பேராசை? கேப்டன்சியை தவறாக பயன்படுத்தியதால் இந்தியா தோல்வியா.. குவியும் புகார்!
- News
மேள தாளம்.. சாத்தான்குளம் ஊரே ஒன்னு கூடிடுச்சி, யாருக்குப்பா கல்யாணம்னு பார்த்தா.. அங்கதான் ட்விஸ்ட்
- Technology
பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? அப்போ இந்த போன் ரூல்ஸ் பின்பற்றனும்.!
- Automobiles
அனல் பறக்கும் ஏலம்... மஹிந்திராவின் 16 லட்ச ரூபா காரை கோடிகளை கொட்டி வாங்க முந்தியடிக்கும் கோடீஸ்வரர்கள்!
- Lifestyle
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
- Finance
கௌதம் அதானியை இனி காப்பாற்ற முடியாதா..? 10 பில்லியன் டாலர் மாயம்.. 7வது இடம்..!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
வாரிசு vs துணிவு: பேனர்களை கிழித்து சண்டையை ஆரம்பித்த ரசிகர்கள்.. தியேட்டர் கண்ணாடியும் உடைந்தது!
சென்னை: அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் ஒரே நாளில் வெளியானால் நிச்சயம் பெரிய சம்பவம் வெடிக்கும் என எதிர்பார்த்ததை போலவே தற்போது திருவிழாவாக காட்சியளித்த தியேட்டர்கள் கலவர பூமியாக மாறி உள்ளன.
நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரு பெரிய படங்களும் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளன.
இரு படங்களும் சில குறைகளுடன் பல பாசிட்டிவ் அம்சங்களை கொண்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன.
Thunivu Review: அடேங்கப்பா.. இப்படியொரு ஸ்பீடில் அஜித் படமா? துணிவு விமர்சனம் இதோ!

பாசிட்டிவ் விமர்சனங்கள்
அஜித்தின் துணிவு படத்துக்கும் விஜய்யின் வாரிசு படத்துக்கும் அதிகளவு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. நடிகர் அஜித் நீண்ட நாள் கழித்து நெகட்டிவ் ஷேடில் நடித்த நிலையில், தியேட்டர் முழுவதும் விசில் சத்தம் விண்ணை பிளக்கின்றன. அதே சமயம் நடிகர் விஜய் குடும்ப கதையில் நடித்து ரசிகர்களை குதூகலப்படுத்தி உள்ளார்.

கண்ணாடி காலி
சென்னையில் உள்ள பிரபல ரோகிணி திரையரங்கில் படம் போடுவதற்கு முன்னதாக ரசிகர்களை வரிசையில் நிற்க வைத்து கண்ணாடி கதவுகளை போட்டு அடைத்து வைத்திருந்தனர். ஆனால், படத்தை பார்க்கும் ஆர்வ மிகுதியால் ரசிகர்கள் கட்டுக் கடங்காமல் தள்ளிய நிலையில், சில ரசிகர்கள் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கண்ணாடி உடைப்புக்கு காரணமானவர்களை போலீஸார் கண்டித்த நிலையில் படம் திரையிடவும் தாமதம் ஏற்பட்டது.

பேனர்கள் கிழிப்பு
அஜித் ரசிகர்கள் சிலர் விஜய்யின் வாரிசு படத்தின் பேனர்களை கிழித்த நிலையில், கடுப்பான விஜய் ரசிகர்கள் துணிவு படத்துக்காக வைக்கப்பட்டிருந்த அத்தனை அஜித் பேனர்களையும் கிழித்தது பெரும் சண்டையை ஆரம்பித்து வைத்தது. அஜித்தின் துணிவு பேனர்களை அகற்றி விட்டு விஜய்யின் வாரிசு படத்தின் பேனர்களை விஜய் ரசிகர்கள் வைத்த காட்சி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

பாலாபிஷேகம், பட்டாசு
தியேட்டர்களில் கட்டவுட்கள் வைத்து பாலாபிஷேகம் எல்லாம் செய்யக் கூடாது என அரசு எச்சரித்த நிலையில், அதையும் மீறி ரசிகர்கள் ஆர்வ மிகுதியால் பாலாபிஷேகம் நடத்தினர். சில ரசிகர்கள் அலகு குத்தி கிரேன் மீது எல்லாம் தொங்கியபடி அபிஷேகம் செய்தனர். தியேட்டர்களில் முதல் காட்சி தொடங்கும் முன்னதாக பொங்கல் பண்டிகையே தீபாவளியாக மாறும் அளவுக்கு பட்டாசு சத்தம் காதை கிழித்தன.