Don't Miss!
- Lifestyle
உங்க பிறந்த தேதி 2,11,20 மற்றும் 29 இதுல ஒன்னா? அப்ப உங்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் காத்திருக்கு தெரியுமா?
- News
நாலாக உடைந்த அதிமுக.. ஜால்ரா.. பாஜக போட்டியிட்டாலும் வரவேற்போம்..சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
- Finance
இந்தியாவுக்குக் கிளம்பும் நேரம் வந்தாச்சு.. NRI டெக் ஊழியர்கள் கண்ணீர்..!
- Sports
ஒரே போட்டியில் பல மாற்றங்கள்.. நியூசி, உடனான 3வது ODI போட்டி..ப்ளேயிங் 11ல் ரோகித் சர்மா பலே திட்டம்
- Technology
விபூதி அடிக்கும் BharOS என்கிற "பாரத்" ஓஎஸ்? இந்த உண்மை தெரிஞ்சா.. கழுவி கழுவி ஊத்துவீங்க!
- Automobiles
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
வாரிசு VS துணிவு... இறுதிக்கட்ட பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் யார் முன்னிலை?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு
சென்னை: விஜய்யின் வாரிசு, அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படங்கள் பொங்கலை முன்னிட்டு கடந்த வாரம் 11ம் தேதி ரிலீஸானது.
விஜய் - அஜித் திரைப்படங்கள் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் களமிறங்கியதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.
அதேபோல், வாரிசு, துணிவு என இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும், இரண்டு திரைப்படங்களுக்கும் கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், கடந்த 8 நாட்களில் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல ரிசல்ட் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
படத்தின்
ரிசல்ட்
நம்ம
கையில்
இல்லை..
கோபத்துடன்
பதிலடி
கொடுத்த
வாரிசு
பட
இயக்குநர்!

வாரிசு VS துணிவு
விஜய் - அஜித் திரைப்படங்கள் ஒரேநாளில் வெளியானால் ரசிகர்களின் கொண்டாட்டம் எப்படி இருக்கும் என கேட்கவே வேண்டாம். எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இருதரப்பு ரசிகர்களுக்கும் பொங்கல் விருந்தாக வெளியாகியுள்ளன விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள். வாரிசு ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் பிளஸ் ஆக்ஷன் ஜானரிலும், துணிவு முழுக்க முழுக்க ஆக்ஷன் பிளஸ் சோஷியல் மெசேஜ் என்ற கான்செப்ட்டிலும் உருவாகியுள்ளது. இந்த இரண்டு படங்களுமே பொங்கல் கொண்டாட்டத்துக்கான ஃபார்மேட்டில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

துணிவு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தை ஹெச் வினோத் இயக்கியுள்ளார். வங்கிகளில் நடக்கும் பண மோசடியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் நாளில் இருந்தே நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ள துணிவு பாக்ஸ் ஆபிஸில் 200 கோடியை நெருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை 150 கோடி வசூலை கடந்துவிட்டதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இதுவரை படக்குழு தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

வாரிசு பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்
விஜய்யுடன் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள வாரிசு படத்தை வம்ஷி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார். இந்தப் படம் முதல் 5 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து 210 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாக நேற்று படக்குழு அறிவித்தது. முதல் வாரத்தில் 200 கோடி வசூலை கடந்துள்ளதால் வாரிசு படக்குழு உற்சாகத்தில் உள்ளது.

யார் முன்னிலை?
வாரிசு, துணிவு என இரண்டு படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல ஓப்பனிங் கிடைத்தது. இதுவரை வாரிசு படத்தின் வசூல் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை கிடைத்த தகவலின் படி வாரிசு தான் முன்னிலையில் உள்ளது. ஆனால், துணிவு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் உண்மையான நிலவரம் தெரியும் என சொல்லப்படுகிறது. முக்கியமாக தமிழ்நாட்டில் இரண்டு படங்களின் வசூலும் ஒரே அளவில் இருப்பதாகவே தகவல் கிடைத்துள்ளது.