twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலாவின் வர்மா.. படமா இது.. தயாரிப்பாளர் ஷாக்.. வெளியிட மாட்டேன் என அறிவிப்பு!

    வர்மா படத்தை மீண்டும் வெறொரு இயக்குநர் மூலம் படமாக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

    |

    Recommended Video

    Bala movie Varma dropped | பாலாவின் வர்மா! வெளியிட மாட்டேன் என தயாரிப்பாளர் அறிவிப்பு!

    சென்னை: விக்ரம் மகன் த்ருவ் நடிப்பில் பாலா இயக்கிய வர்மா படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை வெறொரு இயக்குநரை வைத்து மீண்டும் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

    கடந்தாண்டு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் அர்ஜுன்ரெட்டி. தமிழிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. விஜய் தேவரகொண்டாவிற்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

    இதனால் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்தனர். தமிழில் பாலா இயக்க, நடிகர் விக்ரம் மகன் த்ருவ் இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், ரைஸா வில்சன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

    Varma: வர்மா கைவிடப்பட்ட கதை... ஆரம்பத்தில் இருந்தே இப்டி தான்... விக்ரம் மகனுக்கு நேரமே சரியில்லை! Varma: வர்மா கைவிடப்பட்ட கதை... ஆரம்பத்தில் இருந்தே இப்டி தான்... விக்ரம் மகனுக்கு நேரமே சரியில்லை!

    வரவேற்பு:

    வரவேற்பு:

    ரதன் இசையில், சுகுமார் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகிய இந்தப் படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. சமீபத்தில் வெளியான வர்மா டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    தள்ளிப் போன ரிலீஸ்:

    தள்ளிப் போன ரிலீஸ்:

    இப்படத்தின் அனைத்து பணிகள் முடிவடைந்த நிலையில், காதலர் தினத்திற்கு இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சிலப்பல காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டது.

    புதிய இயக்குநர்:

    புதிய இயக்குநர்:

    இந்நிலையில், இந்தப்படம் கைவிடப்படுவதாக அதிர்ச்சித் தகவலை வர்மா படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதே கதை புதிய இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் உடன் மீண்டும் தயாரிக்கப்பட்டு திரையிடப்படும் என்றும் பட நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.மேலும், நாயகனாக த்ருவே நடிக்க இருப்பதாகவும், வரும் ஜூன் 2019க்குள் முழுப்படத்தையும் எடுத்து முடித்து ரிலீஸ் செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்தியில்லை:

    திருப்தியில்லை:

    பாலா இயக்கியதில் திருப்தி இல்லாததால் தயாரிப்பு தரப்பில் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. பாலா இயக்கிய சேது படம் மூலம் தான் விக்ரமிற்கு தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு நிரந்தர இடம் கிடைத்தது இங்கே நினைவுகூரத்தக்கது.

    English summary
    The E4 entertainment company have announced that they are not happy with Thruv Vikram's Varma and so they decided to reshoot the full movie again.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X