twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Varmaa- எந்த ஊர்ல பிட்டு படம் எடுப்பவருக்கு தேசிய விருது கொடுக்கிறாங்களாம்?: பாலா ரசிகர்கள்

    By Siva
    |

    சென்னை: பாலாவுக்கு ரீமேக் எல்லாம் செட் ஆகாது என்று தெரிந்தும் அவரை கட்டாயப்படுத்தி வர்மா படத்தை எடுக்க வைத்துவிட்டு தற்போது கைவிட்டுள்ளனர்.

    த்ருவ் விக்ரமை வைத்து பாலா இயக்கிய வர்மா படம் திருப்திகரமாக இல்லை என்று கூறி அதை கைவிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். த்ருவை வைத்து வேறு ஒரு இயக்குனர் மூலம் அதே படத்தை எடுக்க உள்ளது.

    அர்ஜுன் ரெட்டி ரீமேக்கான வர்மாவை பாலா வேறு மாதிரியாக எடுத்து கெடுத்துவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ரீமேக்

    ரீமேக்

    எனக்கு இந்த ரீமேக் எல்லாம் வராது, என் சொந்த கதையை தான் படம் பண்ணத் தெரியும் என்று ஆரம்பத்திலேயே பாலா மீண்டும் மீண்டும் தெரிவித்திருக்கிறார். அவருக்கு ரீமேக் வராது என்று தெரிந்தும் அவரை கட்டாயப்படுத்தி படத்தை எடுக்க வைத்தனர்.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    வர்மா படத்தை பாலா பிட்டு படம் போன்று எடுத்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆபாச காட்சிகளை வைத்து பிட்டு படம் எடுத்து ஓட்டுபவர் அல்ல பாலா என்பது திரையுலகினருக்கு மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் தெரியும். அந்த மனிதருக்கு ஆபாசத்தின் மீது எல்லாம் நம்பிக்கை இல்லை.

    விக்ரம்

    விக்ரம்

    சீயான் விக்ரம் தான் தனது குருவான பாலா தன் மகனின் கெரியரை துவங்கி வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவரிடம் பேசி மனதை மாற்றி ரீமேக் செய்ய ஒப்புக்கொள்ள வைத்தார். இந்நிலையில் விக்ரம் கூட தயாரிப்பு தரப்புடன் சேர்ந்து கொண்டு இப்படி செய்கிறாரே என்பது பாலாவின் வருத்தம்.

    கோபம்

    கோபம்

    பாலாவின் படங்கள் 6 தேசிய விருதுகள், 13 மாநில விருதுகள், 15 பிலிம்பேர் விருதுகள், 14 சர்வதேச திரைப்பட விழா விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளன. பிட்டு படம் எடுப்பவருக்கு இது போன்று விருதுகள் கொடுக்க மாட்டார்கள். பாலாவின் திறமையை இவர்கள் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை என்று அவரின் ரசிகர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

    English summary
    Director Bala's fans are unhappy with the producers of Varmaa and Vikram for dropping the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X