TRENDING ON ONEINDIA
-
எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
-
லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...
-
LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்!
-
இந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க
-
"கடவுள் இல்லை" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்!
-
கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்!
-
இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?
-
பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது
Varmaa: விக்ரம் மகனின் முதல் படமே பிரச்சனையானதும் நல்லதாப் போச்சு

சென்னை: வர்மா படம் கைவிடப்பட்டதற்கு த்ருவ் விக்ரம் ராசி பற்றியும், நேரம் பற்றியும் பேசுவது தவறு.
விக்ரம் தன் மகனை ஹீரோவாக்க அர்ஜுன் ரெட்டி பட ரீமேக்கை தேர்வு செய்தார். தன் கெரியரில் பெரிய பிரேக் கொடுத்த பாலாவை வைத்து தான் இந்த படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று விரும்பி, அதையே செய்தார் விக்ரம்.
இந்நிலையில் வர்மா படத்தை பாலா சரியாக இயக்கவில்லை என்று கூறி கைவிட்டுள்ளனர்.
த்ருவ்
வர்மா கைவிடப்பட்டு மீண்டும் வேறு ஒரு இயக்குனரை வைத்து இயக்கப்படுகிறது என்ற செய்தி அறிந்ததும் சிலர் முதல் வேலையாக த்ருவ் விக்ரம் ராசியில்லாதவர், அவருக்கு நேரமே சரியில்லை என்று அவர் மீது பழியை போட்டுவிட்டனர்.
நேரம்
படம் கைவிடப்பட்டதற்கும் த்ருவுக்கும் என்ன சம்பந்தம். சும்மா எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக ராசி, நேரம் பற்றி எல்லாம் பேசுகிறார்கள். ராசியில்லாதவர் என்று ஒரு காலத்தில் ஒதுக்கப்பட்ட விக்ரம் தான் பின்னர் கோலிவுட் கொண்டாடும் வெற்றி நாயகன் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி
எளிதில் கிடைக்கும் எதுவும் நமக்கு பெரிதாக தெரியாது. வர்மா படத்திற்காக த்ருவ் கடினமாக உழைத்துள்ளார். அதனால் படம் கைவிடப்பட்டதில் அவருக்கு பெரிய வருத்தம் இருக்கும். இருப்பினும் இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் படம் அடையும் வெற்றி அவருக்கு மிகப்பெரிய திருப்தி அளிக்கும்.
எதிர்ப்பு
த்ருவ் விக்ரம் தற்போது எழும் விமர்சனங்களால் உடைந்து போகாமல் அதை எல்லாம் தைரியமாக எதிர்கொண்டு மீண்டு வந்தார் என்றால் அவர் கெரியருக்கு அது பெரிய விஷயமாக அமையும். விக்ரம் பார்க்காத கஷ்டத்தையா த்ருவ் பார்த்துவிட்டார். கண் முன்பு ரோல் மாடல் இருக்கிறார், மீண்டு வாருங்கள்.
நடிப்பு
நடிக்கவே தெரியவில்லை என்று ஒரு தமிழ் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர் வித்யா பாலன். அதன் பிறகு பாலிவுட் சென்ற வித்யா கான்களுக்கு நிகராக தனக்கென்று பெயர் எடுத்துள்ளார். அதனால் முதல் படம் பிரச்சனையானால் கெரியரே முடிந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை.