»   »  வரூ ரொம்ப ஃபாஸ்ட் அண்ட் போல்ட் நடிகை - வரலட்சுமியை புகழ்ந்து தள்ளிய விஜய் சேதுபதி: வீடியோ

வரூ ரொம்ப ஃபாஸ்ட் அண்ட் போல்ட் நடிகை - வரலட்சுமியை புகழ்ந்து தள்ளிய விஜய் சேதுபதி: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை வரலட்சுமி ரொம்ப ஃபாஸ்ட், போல்ட் அண்ட் கான்ஃபிடன்ட் ஆன நடிகை என விக்ரம் - வேதா திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி வரலட்சுமியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

புஸ்கார் - காயத்ரி இயக்கும் படம் விக்ரம் - வேதா. இதில் நடிகர் விஜய் சேதுபதி, மாதவன், கதிர், வரலட்சுமி என பலர் நடிக்கின்றனர். என்கவுன்டர் செய்யும் போலீஸ் அதிகாரிக்கும் ஒரு தாதாவுக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை என நடிகர் விஜய் சேதுபதி கூறினார். இதுகுறித்து அவர் பேசும் போது,''சீனியரான மாதவனுடன் நடிப்பதில் கொஞ்சம் தயக்கம், பயம் எல்லாம் இருந்தது. ஆனால் மாதவன் மிக இயல்பான மனிதராக இருந்ததால் எங்கள் நட்பு 'தம்'மில் தொடங்கியது'' என கூறினார்.

Varu is a fast, bold and confident actress told Vijay Sethupathy

வரலட்சுமி குறித்துப் பேசும் போது, வரலட்சுமி மிகவும் ஃபாஸ்டாக பேசுகிறார். அவர் என்ன பேசினார் என்பதை அவர் பேசி முடித்தது, ரீவண்ட் செய்து பார்த்த பிறகுதான் அவருடன் நம்மால் பேச முடியும். அவர் ஃபாஸ்ட், போல்ட் அண்ட் கான்பிடன்ட் ஆன லேடி'' என புகழ்ந்தார்.

மாதவன் இப்படத்தைப் பற்றி பேசும்போது, '' விஜய் சேதுபதி நான் நடித்தவர்களிலேயே மிகவும் பிரில்லியண்ட் ஆன ஆக்டர், இந்தப் படம் நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்'' என்றார்.

English summary
Varu is a fast, bold and confident actress told Vijay Sethupathy in Vikram vedha press meet

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil