»   »  சம்பளத்தை 2 மடங்காக உயர்த்திய வாரிசு நடிகர்: தெறித்து ஓடும் விளம்பர நிறுவனங்கள்

சம்பளத்தை 2 மடங்காக உயர்த்திய வாரிசு நடிகர்: தெறித்து ஓடும் விளம்பர நிறுவனங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் வருண் தவான் திடீர் என்று தனது சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்தியுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.

அப்பா டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் இரட்டையர்களாக நடித்த ஜுட்வா 2 படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்தில் வருணுக்கு ஜோடியாக டாப்ஸி, ஜாக்குலின் ஆகியோர் நடித்தனர்.

ஜுட்வா 2 படம் ஹிட்டானதை அடுத்து வருண் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

பிராண்டு

பிராண்டு

வருண் தவான் படங்கள் தவிர்த்து விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அவர் ஏற்கனவே சில பிராண்டுகளின் விளம்பர தூதராக உள்ளார். இந்நிலையில் புது பிராண்டுகளால் அவரை ஒப்பந்தம் செய்ய முடியாமல் உள்ளது.

வருண்

வருண்

ஜுட்வா 2 பட வெற்றியை அடுத்து வருண் தவான் விளம்பரப் படங்களில் நடிக்க வாங்கிய சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்திவிட்டாராம். இது அவரை ஒப்பந்தம் செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு பிரச்சனையாகியுள்ளது.

தயக்கம்

தயக்கம்

வருண் தவான் தனது சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்திவிட்டார் என்பதை விளம்பர நிறுவனங்கள் முதலில் நம்பவில்லை. அது உண்மை என்று தெரிய வந்த பிறகு வருணை ஒப்பந்தம் செய்ய தயங்குகிறார்கள்.

அறிவுரை

அறிவுரை

விளம்பர நிறுவனங்கள் பின் வாங்குவதை பார்த்த வருணின் மேனேஜ்மென்ட் நிறுவனம் வேண்டாம்ஜி கொஞ்சம் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளதாம்.

English summary
Bollywood actor Varun Dhawan has doubled his remuneration for acting in advertisements. Brands are hesitating to sign him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X