»   »  படிச்சு படிச்சு சொல்லியும் மறுபடியும் அவ கூட நடிக்கிற: வாரிசு நடிகர் மீது காதலி கோபம்

படிச்சு படிச்சு சொல்லியும் மறுபடியும் அவ கூட நடிக்கிற: வாரிசு நடிகர் மீது காதலி கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மீண்டும் ஆலியா பட்டுடன் ஜோடி சேரும் நடிகர் வருண் தவான் மீது அவரது காதலி கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் வெளியான ஜுட்வா 2 படம் நல்லபடியாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடித்தபோது வருண் டாப்ஸியுடன் நெருக்கமானது அவரது காதலி நடாஷா தலாலுக்கு பிடிக்கவில்லையாம்.

இதை எப்படி வருணிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்தாராம்.

ஆலியா

ஆலியா

வருண் தவான் ஆலியா பட்டடுன் சேர்ந்து நடிப்பதும் நடாஷாவுக்கு பிடிக்கவில்லையாம். அதனால் இனி ஆலியாவுடன் நடிக்க வேண்டாம் என்று கூறியிருந்தாராம்.

வருண்

வருண்

அபிஷேக் வர்மன் இயக்கும் சித்தாத் படத்தில் வருண் தவான், ஆலியா பட் மீண்டும் ஜோடி சேர்கிறார்கள். இந்த செய்தியை கேட்டதும் நடாஷா வருண் மீது கோபத்தில் உள்ளாராம்.

சித்தார்த்

சித்தார்த்

ஆலியா பட்டும், வருண் தவானும் ஓவர் நெருக்கமாக பழகுவது பிடிக்காமல் தான் ஆலியாவுக்கும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் இடையே சண்டை வந்ததாம். இதையடுத்தே காதலர்களான ஆலியா, சித்தார்த் பிரிந்தார்களாம்.

சித்தாத்

சித்தாத்

சித்தாத் படத்தில் ஆதித்யா ராய் கபூரும் உள்ளார். வருண், ஆதித்யா சகோதரர்களாக நடிக்கிறார்கள். இருவருமே ஆலியாவை காதலிக்க பிரச்சனை ஏற்படுவது தான் கதையாம்.

English summary
Buzz is that Bollywood actor Varun Dhawan's girlfriend is unhappy as he is going to act with Alia Bhatt again.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil