Just In
Don't Miss!
- Automobiles
மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...
- News
மாசி மகம் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்த துர்கா ஸ்டாலின் - வெற்றிக்கு வழிபாடு
- Education
ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Finance
3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
- Sports
சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
- Lifestyle
இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காதலியை கரம் பிடிக்கிறார்.. வரும் 24 ஆம் தேதி பிரபல ஹீரோ திருமணம்.. உறுதி செய்த நடிகர்!
சென்னை: பிரபல நடிகர் வருண் தாவன் திருமணம் வரும் 24 ஆம் தேதி நடக்க இருப்பது உண்மைதான் என்று நடிகர் அனில் தாவன் உறுதிப்படுத்தி உள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் வருண் தாவன். இந்தி பட இயக்குநர் டேவிட் தவானின் இளைய மகன்.
உன்னை காதலிக்கிறேன்.. 30வது திருமண நாளில் மனைவிக்காக உருகும் சுரேஷ் தாத்தா!
இந்தியில், பல படங்களில் நடித்துள்ள வருண் தாவன், அங்கு முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

நடாஷா தலால்
ஸ்டூடண்ட் ஆப் த இயர் படம் மூலம் ஹீரோவான அவர், தொடர்ந்து பட்லாபூர், ஏபிசிடி 2, தில்வாலே, ஸ்ட்ரீட் டான்ஸர் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர், ஃபேஷன் டிசைனரான நடாஷா தலாலை பல ஆண்டுகளாகக் காதலித்து வருகிறார். இது பள்ளியில் படிக்கும்போதே ஆரம்பித்த காதலாம்.

தள்ளிப் போனது
இவர்களுக்கு கடந்த ஆண்டே திருமணம் என்று தகவல் வெளியானது. ஆனால் கொரோனா காரணமாக திருமணம் தள்ளிப் போனது. இந்நிலையில் இந்த மாதம் 24 ஆம் தேதி இவர்கள் திருமணம் நடக்கப் போவதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில், இந்தச் செய்தியை வருண் தாவனின் சித்தப்பாவும் நடிகருமான அனில் தாவன் உறுதிப்படுத்தி உள்ளார்.

நடிகர் ஷாரூக் கான்
தெற்கு மும்பையில் உள்ள அலிபாக்கில் இவர்கள் திருமணம் நடக்கிறது. கொரோனா காலம் என்பதால் 50 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஷாரூக் கான், சல்மான் கான், கரண் ஜோஹர் உட்பட பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

திருமண உடை
இந்து முறைப்படி நடக்கும் இந்த திருமணம், நாளை முதல் மூன்று நாட்கள் நடக்க இருக்கிறது. தன் திருமண உடையை நடாஷாவே டிசைன் செய்திருக்கிறாராம். வருண் இப்போது ஜக் ஜக் ஜீயோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங்கில் சிலருக்கு கொரோனா பரவியதை அடுத்து படப்பிடிப்பு தடைபட்டது.