Just In
- 50 min ago
அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
காதலருடன் நிச்சயதார்த்தம் முடித்த பிரபல சீரியல் நடிகை.. இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்து!
- 1 hr ago
கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing
- 1 hr ago
லயோலாவில் களைக்கட்டிய ஒயிலாட்டம்.. சாட்டைக்குச்சி ஆட்டம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- News
வேளாண் சட்டத்தை எதிர்த்து... டிராக்டரில் வந்து பதவியை ராஜினாமா செய்த ஹரியானா எம்.எல்.ஏ.!
- Sports
ஸ்ட்ரெச்சர் வேண்டாம்.. ஐசியூ வார்டுக்குள் நடந்தே சென்ற கங்குலி.. இப்போது எப்படி இருக்கிறார்?
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்!! கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன
- Finance
4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இது என்ன புதுக்கதையா இருக்கு... 22 வருசத்துக்குப் பிறகு ‘இந்தியன்’ பற்றி வெளியான சுவாரஸ்யமான தகவல்!

சென்னை: இந்தியன் படக்கதை ரஜினிக்காக உருவாக்கப்பட்டது, அவரது கால்ஷூட் இல்லாததால் கமல் கைக்கு மாறியது எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.
கடந்த 22 வருடங்களுக்கு முன்னர் கமல் -ஷங்கர் கூட்டணியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் இந்தியன். தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தில் நடித்த, கமலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாக வேலைகள் தொடங்கியுள்ளன. இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. முதல் பாகத்தில் நாயகனாக நடித்த கமலே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்கிறார்.
இந்நிலையில் இந்தியன் படம் குறித்த சுவாரஸ்யமான பிளாஷ்பேக் ஒன்றைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அப்போது இயக்குநர் ஷங்கர் அணியில் உதவி இயக்குநராக இருந்த இயக்குநர் வசந்தபாலன். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது,

குருவிற்கு வாழ்த்துக்கள்:
"நேற்று இணையத்தில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க இருக்கிறது என்ற செய்தியைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. இந்தியன் தாத்தாவின் ,கத்திக்கு இரையாக ஊழலும் லஞ்சமும், வரிந்து கட்டிக்கொண்டு காத்திருக்கிறது. என் குருவிற்கு வாழ்த்துகள்.

ஸ்வீட் மெமரீஸ்:
இந்த நேரத்தில் 'இந்தியன்' திரைப்படம் தொடங்கிய தருணம் ப்ளாஷ்பேக்.ப்ளாஷ்பேக்குன்னு சொன்னவுடனே ,வேறு தளத்திற்கு தாவிவிடாதீர்கள்.கொஞ்சம் வெயிட்.sweet memories.

ரஜினிக்காக பெரிய மனுஷன்:
'ஜென்டில்மேன்' திரைப்படத்தின் மும்மொழி வெற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி,ஷங்கர் சாரை அழைத்தார். 1994-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். 'காதலன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ,நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு ஏதாவது கதையிருக்கா ஷங்கர் என்று ரஜினி சார் கேட்க 'பெரிய மனுஷன்' என்ற தலைப்பில் ரஜினி சாருக்கான கதையை ஷங்கர் சார் உருவாக்கினார்.

கால்ஷூட் பிரச்சினை:
உடனே அவரிடம் சொல்லப்பட்டது. அவர் மிக வியந்து பாராட்டினார். 'காதலன்' திரைப்படம் முடியும் தருவாயில் ரஜினி சாரின் பல படங்களின் கால்ஷீட் தேதிகள் இடிக்க ,உடனே படம் செய்ய முடியாமல் போனது.

கமலுக்கு சொல்லப்பட்டது:
'காதலன்' திரைப்படத்திற்குப் பிறகு ஷங்கர் சார் 'பெரிய மனுஷன்' கதையை தான் பண்ண வேண்டும் என்று உறுதியாக இருந்தார். கதையில் கதாநாயனுக்கு தந்தை மகன் என்ற இரு வேடங்கள். ஆகவே ரஜினி சாருக்கு அடுத்து கமல் சாருக்கு அந்தக் கதை சொல்லப்பட்டது. பல்வேறு சந்திப்புகள் நிகழ்ந்தன.

பிளான் பி:
ஒருவேளை கமல் நடிக்க மறுத்தால் ,என்ன செய்வது என்று எண்ணி பிளான் பி தயாரானது. தெலுங்கு கதாநாயகர்கள் நாகார்ஜீனா அல்லது வெங்கடேஷை மகனாக நடிக்க வைக்கலாம். டாக்டர் ராஜசேகரை தாத்தா வேடத்தில் நடிக்க வைக்கலாம்.தெலுங்குப் படமாக மாறிடுமே என்று கவலைப்பட்டோம்.

பயம்:
ஷங்கர் சாருக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது என்ற சமாதானப் பேச்சும் உலா வந்தது. நமக்கு தெலுங்கு தெரியாது. நம்மைக் கழட்டிவிட்டு விடுவார்கள் என்ற பயம் எனக்கு. கடவுளே எப்படியாவது கமல் சார் ஓகே சொல்லிவிடவேண்டும் என்று டைரக்டர்ஸ் காலனியில் உள்ள விநாயகரை வேண்டிக்கொண்டேன்.

கமல் உறுதி:
நடிகர் கார்த்திக்கை வைத்து தொடங்கலாம் சத்யராஜ் தாத்தா கேரக்டர் என்று பலவிதமான யோசனைகளை நானும் இணை இயக்குநர்களும் வாரி வழங்கினோம்.ஒருவழியாக கமல் சார் நடிப்பது முடிவானது. விநாயகர் கருணையால் நடந்தது என்று நான் நம்பி வெடலைத் தேங்காய் போட்டேன்.

எதிர்பார்ப்பு:
இந்தியன் என்கிற டைட்டிலுக்கு முன் என்னென்ன டைட்டில்கள் விவாதிக்கப்பட்டன.இன்னொரு பதிவில் பார்க்கலாம்" என சின்ன ஆவலைத் தூண்டும் வார்த்தைகளுடன் இந்தப் பதிவை வசந்தபாலன் முடித்துள்ளார். ஏற்கனவே பெரிய மனுசன் என இந்தப் படத்திற்குப் பேர் வைக்கப்பட்டது இந்தப் பதிவின் மூலம் தெரிய வந்துள்ளது. இன்னும் என்னென்ன பேர் வைக்கப்பட்டிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
2.0:
முன்னதாக 'ரோபோ' கதை முதலில் கமலை வைத்து தொடங்கப்பட்டு, பின் நிறுத்தப்பட்டு, சில வருடங்கள் கழித்து அது ரஜினி நடிப்பில் எந்திரன் ஆனது. தற்போது அதன் இரண்டாம் பாகமும் 2.0 என்ற பெயரில் ரஜினி நடிப்பிலேயே ரிலீசாகி வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.