»   »  ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்... மீண்டும் மயக்க வரும் வசந்தமாளிகை!

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்... மீண்டும் மயக்க வரும் வசந்தமாளிகை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய இளைஞர்கள் பிறக்காத 1972ம் ஆண்டு வெளியாகி அந்தக் காலத்து இளசுகளை தியேட்டர்களை நோக்கிப் படையெடுக்க வைத்து காதல் அலையைப் பரப்பி மயங்க வைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வசந்த மாளிகை புத்தம் புதுப் பொலிவுடன் மீண்டும் திரைக்கு வருகிறது.

சிவாஜி கணேசனின் காதல் காவியம்

சிவாஜி கணேசனின் காதல் காவியம்

வசந்த மாளிகை தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல. சிவாஜி கணேசனின் திரை வரலாற்றிலும் மிக முக்கியமான படம். இன்று பார்த்தாலும் திகட்டாத காதல் காவியம். சோகம், ரொமான்ஸ் என அனைத்தும் சரிவர கலந்த சகாப்தப் படம்.

வசூல் சாதனை

வசூல் சாதனை

வசந்த மாளிகை 1972ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி ரிலீஸானது. தமிழகம் மட்டுமல்லாமல் இலங்கையிலும் இப்படம் மிகப் பெரிய ஹிட் ஆனது. சில்வர் ஜூப்ளி கண்டது. அரங்கு நிறைந்த காட்சிகளாக அடித்து ஓடிய அசகாய படம் வசந்தமாளிகை.

நடிப்பில் பலத்த போட்டி

நடிப்பில் பலத்த போட்டி

சிவாஜி கணேசன் மட்டுமல்லாமல் வாணிஸ்ரீ, பாலாஜி, சுகுமாரி, நாகேஷ் என அத்தனை பேருமே இப்படத்தில் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். அதில் சிவாஜி கணேசனின் நடிப்பு இன்றளவும் காதல் தோல்வியடைந்தவர்களாக நடிப்பவர்களுக்கு பாடமாக அமைந்துள்ளது.

மயக்கும் இசை தந்த மகாதேவன்

மயக்கும் இசை தந்த மகாதேவன்

கே.வி.மகாதேவனின் இசையில் மயக்கம் என்ன இந்த மெளனம் என்ன, ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன், குடிமகனே பெருங்குடிமகனே உள்ளிட்ட சூப்பர் ஹிட் பாடல்கள் அன்று பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது.

மீண்டும் தியேட்டர்களுக்கு

மீண்டும் தியேட்டர்களுக்கு

சமீபத்தில் சிவாஜி கணேசனின் கர்ணன் திரைப்படம் புதுப் பொலிவுடன் டிஜிட்டல் மயமாக்கி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அந்த வரிசையில் தற்போது வசந்தமாளிகையும் புதுப் பொலிவுடன் மீண்டும் திரைக்கு வருகிறது.

டிஜிட்டல் மயம்- கலர் கரெக்ஷன்

டிஜிட்டல் மயம்- கலர் கரெக்ஷன்

கர்ணனைப் போலவே வசந்த மாளிகை படத்திலும் கலர் திருத்தம், டிஜிட்டல்மயம், ஆடியோ திருத்தம் உள்ளிட்டவற்றை செய்து புதுப் பொலிவாக்கியுள்ளனர்.

டிசம்பர்7ல் ரீ ரிலீஸ்

டிசம்பர்7ல் ரீ ரிலீஸ்

டிசம்பர் 7ம் தேதி வசந்தமாளிகை மீண்டும் திரைக்கு வருகிறது. இதை சிறப்பான விழா போல கொண்டாட சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்துள்ளதாம்.

இப்படத்தை ரீ ரிலீஸ் செய்யும் பணியை சாய் கணேஷ் பிலிம்ஸ் அதிபர் சீனிவாசன் மேற்கொண்டுள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கெளரவம் படத்தை இப்படித்தான் ரீ ரிலீஸ் செய்தார் என்பது நினைவிருக்கலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Remember Vasantha Maaligai. The evergreen romantic hit of thespian SIvaji Ganesan. Released in 1972 Septem,ber 29, the film featured Sivaji Ganean, Vanisree, Balaji Sukumari and Nagesh in lead roles. Directed by K S Prakash, the movie had music by K V Mahadevan. Close on the heels of Karnan's (re-released after digital restoration), plans are now on by Srinivasan of Sai Ganesh Films to re-release Vasantha Maaligai after colour correction, cinemascope and digital restoration, especially too woo younger generation audience.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more