வசந்தபாலனின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது... அதிகாரப்பூர்வ தேதியை அறிவித்த படக்குழு!
சென்னை : வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன், அரவான் என தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குனர் வசந்தபாலன்.
Recommended Video
கைதி படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய அர்ஜுன் தாஸ் அதைத் தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் கம்பீரமான நடிப்பின் மூலம் தெரிக்க விட்டிருந்தார்.
வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு இப்பொழுது இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் எப்போது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்பொழுது வெளியாகியுள்ளது .

தேசிய விருது
இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை பெற்றுள்ளது. ஆல்பம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான வசந்தபாலன் வெயில் படத்திற்காக தேசிய விருதை வென்றதோடு ரசிகர்களின் மனதையும் வென்றார். அண்ணன்-தம்பி பாசத்தை மிகவும் வித்தியாசமான கதை களத்தில் உணர்வுபூர்வமாக கூறியிருந்த வெயில் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரிட் படமாக இருந்து வருகிறது.

ஆகச் சிறந்த படங்கள்
அதைத்தொடர்ந்து இயக்கிய அங்காடித்தெரு பல விருதுகளை வாங்கி குவித்தது. இந்த படமும் தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்தது. வெயில் அங்காடித்தெரு போன்றப் படங்களுக்குப் பிறகு வசந்த பாலனுக்கு தமிழ் சினிமாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாக அதைத் தொடர்ந்து வெளியான அரவான் மற்றும் காவிய தலைவன் மிகப்பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது

ஜெயில் கைதிகள்
6 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வந்த ஜெயில் படத்தை வசந்த பாலன் இயக்கி வந்தார். ஜெயிலில் குற்றவாளிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள். எந்த மாதிரியான கொடுமைகள் எல்லாம் ஜெயிலுக்குள் கைதிகளின் மீது நடத்தப்படுகிறது என்பதை தத்ரூபமாக காட்டும் வகையில் உருவாகியிருந்த ஜெயில் வெளியாக முடியாமல் சிக்கலை சந்தித்து உள்ளது. விரைவிலேயே அனைத்து பிரச்சனைகளும் முடிந்து ஜெயில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அர்ஜுன் தாஸ்
இந்நிலையில் வசந்தபாலன் தன்னுடைய அடுத்த படத்தையும் எடுத்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதியில் மிரட்டல் வில்லனாக நடித்து அசரவைத்த வைத்த நடிகர் அர்ஜுன் தாஸ் இப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். சார்பட்டா பரம்பரையில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறிய துஷாரா விஜயன் இப்படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் அறந்தாங்கி நிஷா, வனிதா விஜயகுமார், பாவா லட்சுமணன், அர்ஜுன் சிதம்பரம் என பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார்.

செப்டம்பர் 10ம் தேதி ஃபர்ஸ்ட் லுக்
வித்தியாசமான கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் அதன் டைட்டில் என்னவாக இருக்கும் என படக்குழு விளம்பரப்படுத்தி வந்தது. இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் குறித்த முக்கிய அப்டேட் இப்பொழுது வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் செப்டம்பர் 10ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்ற மாஸான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது. வசந்தபாலன் மற்றும் அவரது பள்ளி நண்பர்கள் ஒன்றாக இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோ என்ற நிறுவனத்தை தொடங்கி இப்படத்தை தயாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











