»   »  ‘செம்பரம்பாக்கம்’... படமாகிறது சென்னை வெள்ளம்.. இயக்குநர் வசந்தபாலன்... ஹீரோ அருள்நிதி!

‘செம்பரம்பாக்கம்’... படமாகிறது சென்னை வெள்ளம்.. இயக்குநர் வசந்தபாலன்... ஹீரோ அருள்நிதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் வசந்தபாலனின் புதிய படத்தின் கதைக்களம் சென்னை வெள்ளம் பற்றியது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வசந்தபாலன்.

எதார்த்தமான அதே சமயம் மனதில் பதியும் படியும் மக்களின் வாழ்க்கையைப் படமாக்குவதில் பேர் போனவர் வசந்தபாலன்.

சென்னை வெள்ளம்...

சென்னை வெள்ளம்...

இவர் தனது புதிய படத்திற்கு சென்னை வெள்ளத்தையும், அதன் பாதிப்புகளையும் கதைக்கருவாக எடுத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செம்பரம்பாக்கம்...

செம்பரம்பாக்கம்...

இந்தப் படத்திற்கு செம்பரம்பாக்கம் என அவர் பெயரிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அடையாறு கரையில் வசிக்கும் மக்களின் வெள்ளப் பாதிப்புகளைப் பற்றி இப்படம் பேச இருக்கிறதாம்.

அருள்நிதி...

அருள்நிதி...

இந்தப் படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்க இருக்கிறாராம். தொடர்ந்து வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் இவர் நடித்த ஆறாது சினம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

மார்ச் மாத ஆரம்பத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. அப்போது படத்தின் நாயகி, மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விபரங்கள் தெரிய வரும்.

English summary
After a disastrous outing with his period drama Kaviya Thalaivan, director Vasanthabalan is teaming up with Arulnidhi for his next.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil