For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  100 பிரபலங்கள் சேர்ந்து வெளியிட்ட 'வாஸ்கோடகாமா' படத்தின் பர்ஸ்ட் லுக் !

  |

  சென்னை :வாஸ்கோடகாமா படத்தின் பர்ஸ்ட் லுக்கை விநாயகர் சதுர்த்தியான இன்று 100 பேர் வெளியிட்டிருக்கிறார்கள்.

  Sivakarthikeyan Heroine Athmiya Rajan Gets hitched | Vipin Siddharth, Shriya

  நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிக்பாஸ் வின்னர் ஆரி, கணேஷ் வெங்கட்ராமன் , நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ் ,அதுல்யா ரவி, சுபிக்ஷா, இயக்குநர்கள் கே. எஸ். ரவிக்குமார், ராம்குமார்,இசையமைப்பாளர் டி இமான், தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன், போன்ற பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர் .

  அந்த நடிகரின் படமும் ஓடிடியில் ரிலீஸ்… வஞ்சத்தால் ஏமாறும் இளைஞனின் கதை! அந்த நடிகரின் படமும் ஓடிடியில் ரிலீஸ்… வஞ்சத்தால் ஏமாறும் இளைஞனின் கதை!

  5656 புரொடக்ஷன் சார்பில் உருவாகும் 'வாஸ்கோடகாமா' படத்தை மலேசியாவில் பல பெரிய நிறுவனங்கள் நடத்தும் டத்தோ பி .சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

  எஸ்.பி.பி கடைசி பாடல்

  எஸ்.பி.பி கடைசி பாடல்

  இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதி இந்தப் படத்தை ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்குகிறார்.இந்தத் தயாரிப்பாளர் இயக்குநர் கூட்டணியில் ஏற்கெனவே 'தேவதாஸ் பார்வதி ' படத்தின் பாடலை திரை உலகமே பாராட்டியது எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடைசியாகப் பாடிய பாடல் 'என்னோட பாஷா' பாடல் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றது .

  குரங்கிலிருந்து மனிதன்

  குரங்கிலிருந்து மனிதன்

  "படத்தின் கதாநாயகனின் பாத்திரப் பொருத்தம் கருதியே படத்துக்கு 'வாஸ்கோடகாமா' என்கிற இந்தப் பெயர் வைக்கப்பட்டது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது தான் சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை.குரங்கிலிருந்து வந்த மனிதன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்தான். இன்னும் எதிர்காலத்தில் என்னவாக ஆவான்? அவனது மனநிலையும் குணாம்சமும் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்கு பின் எப்படி மாறும் என்பதைக் கற்பனையாக ஜாலியான காட்சிகளோடு சொல்லும் படம்தான் 'வாஸ்கோடகாமா'.

  நகுல் தான் நாயகன்

  நகுல் தான் நாயகன்

  இப்படத்தின் கதாநாயகனாக நகுல் நடிக்கிறார். கதை பிடித்துப்போய் விட்டது.உடனே சம்மதம் கூறி அடுத்த நாளே ஒப்பந்தம் செய்யும் அளவிற்கு இந்தக் கதை அவரைக் கவர்ந்து விட்டது. இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் முனிஸ்காந்த் போன்ற பரிச்சயமான நட்சத்திரங்களும் படத்தில் உள்ளனர். படத்தின் கதாநாயகி ,வில்லன் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்று கூறினார்.

  பலரும் இணைந்து

  பலரும் இணைந்து

  இது வணிக ரீதியிலான அனைத்து அம்சங்களையும் கொண்ட சுவாரஸ்யமான படமாக உருவாக இருக்கிறது படத்திற்கு ஒளிப்பதிவு வாஞ்சிநாதன், இவர் 'நான் சிரித்தால் 'போன்று சில படங்களில் ஒளிப்பதிவு செய்துள்ளவர். இசை என்.வி. அருண். இவர் எஸ்பிபி கடைசியில் பாடிய பாடலான பாடல் இடம்பெற்ற 'என்னோட பாட்ஷா' என்கிற ஆல்பத்திற்கு இசையமைத்திருக்கிறார் .மேலும் பல சுதந்திரமான இசை ஆல்பங்களை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  சென்னையில் படப்பிடிப்பு

  சென்னையில் படப்பிடிப்பு

  சண்டைக்காட்சிகள்- விக்கி .இவர் 'உறியடி' , 'சூரரைப்போற்று' படங்களுக்கு சண்டைக்காட்சிகள் அமைத்தவர்.கலை இயக்கம்- ஏழுமலை. இவர் 'உறியடி 1', 'உறியடி2 'படங்களில் பணியாற்றியவர். எடிட்டிங் தமிழ்க்குமரன் .இவர் ஏராளமான குறும்படங்களுக்குப் படத்தொகுப்பு செய்தவர். படத்தில் 4 பாடல்கள் உள்ளன. நடனக்காட்சிகளை பிக்பாஸ் புகழ் நடன இயக்குநர் சாண்டி அமைக்கிறார். படப்பிடிப்பு சென்னையிலும் சென்னையின் சுற்றுப் பகுதிகளிலும் நடைபெற உள்ளது.

  100 பேர் வெளியிட்டனர்

  100 பேர் வெளியிட்டனர்

  நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிக்பாஸ் ஆரி, கணேஷ் வெங்கட்ராமன் , நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ்,அதுல்யா ரவி, சுபிக்ஷா, இயக்குநர்கள் கே. எஸ். ரவிக்குமார், ராம்குமார்,இசையமைப்பாளர் டி இமான், தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன், நடிகர், நடிகைகள் அரசியல் பிரபலங்கள் போன்ற நூறுபேர் இன்று 10 ஆம் தேதி காலை 10 மணி 10 நிமிடத்திற்கு வெளியிட்டுள்ளார்கள்.இது இதுவரை திரையுலகம் காணாத புதுமையான நிகழ்வாக இது அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  vascodagama is an upcoming comedy thriller starring actor nakkul in the lead and the movie had its first look posetr release today.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X