»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசனின் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத்தடையை நீதிமன்றம் இன்று நீக்கியது.

படத்தின் தலைப்பு டாக்டர் தொழிலை இழிவுபடுத்துவதாக உள்ளதாக டாக்டர்கள் சங்கம் ரிட் மனுதாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து படத்தின் ரிலீசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பாலசுப்பிரமணியம்இடைக்காலத் தடை விதித்தார்.

இதை எதிர்த்து படத்தை தயாரித்துள்ள ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் நிறுவனம் மேல் முறையீடுசெய்தது. இதனை விசாரித்த நீதிபதி ஏ.கே. ராஜன், இது ஒரு சிவில் வழக்கு. இதில் ரிட் மனுவைடாக்டர்கள் சங்கம் தாக்கல் செய்தது செல்லாம் என்று கூறி, தடையை விலக்குவதாக தீர்ப்பளித்தார்.

இதனால், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியுள்ளது.இதனால் இதே பெயரில் இந்தப் படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும்.

Read more about: arjun, chennai, cinema, divorce, news, strom, swarnamalya
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil