»   »  வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க- காமெடியும் மப்பும் தூக்கல்

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க- காமெடியும் மப்பும் தூக்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்யா, சந்தானம் மற்றும் தமன்னா நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க, காமெடி படங்களின் இயக்குநர் என்று பெயரெடுத்த இயக்குநர் எம்.ராஜேஷ் படத்தை இயக்கியிருக்கிறார்.

ஆர்யாவின் 25 வது படமாக வெளிவந்திருக்கும் திரைப்படம் என்பதால் ரசிகர்களிடம் ஒரு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது, அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்திருப்பதாக படத்தைப் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.


மீடியா மற்றும் ரசிகர்களின் விமர்சனம் படத்திற்கு சாதகமாக அமைந்திருப்பதால் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க, கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்று இப்பொழுதே ஊகங்கள் தொடங்கி விட்டன.


நாமும் நமது பங்கிற்கு படத்தைப் பார்த்த ரசிகர்களின் ட்வீட்டுகள் ஒரு சிலவற்றை இங்கு பார்ப்போம்.


ஒண்ணா அடிச்சவங்க

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க னா நாங்க ஒண்ணா அடிச்சவங்க என்று காமெடியாக படத்தைப் பற்றி கூறியிருக்கிறார் ஹரன் ஜிதேந்திரா என்னும் ரசிகர்.


யாரு படம் ஓடினாலும் ஹீரோ நாங்க தான்

வாலு படத்தில் விஜய்க்கு நன்றி கூறுவது போல படம் ஆரம்பிக்கிறது, வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தில் விஜய் படத்தின் நிறைய BGM கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. எனவே யாரோட படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்க தான்(விஜய்)" என்று கூறியிருக்கிறார் கோவிந்தசாமி என்னும் ரசிகர்.


குடிப்பழக்கம் அத்தியாவசியம்

குடிப்பழக்கம் இளைஞர்களுக்கு அத்தியாவசியமான ஒன்று என்று படத்தை ஒரே வரியில் விமர்சித்து இருக்கிறார் ராஜேந்திரன் என்னும் ரசிகர்.


மாஸா மப்பா

இன்று வெளியாகியிருக்கும் வாலு மற்றும் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க இந்த 2 படங்களில் எந்தப் படத்தில் மாஸ் அதிகம் எந்தப் படத்தில் மப்பு அதிகம் என்று குறும்பாக கேள்வி கேட்டிருக்கிறார் அருண்காந்த். நிஜமாவே உங்களுக்கு தெரியாதா பாஸ்?


டைட்டிலேயே ஹீரோ தெரிஞ்சிட்டாரு

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க டைட்டிலேயே ஹீரோ யாருன்னு இயக்குநர் சொல்லிவிட்டார்" என்று ராஜேஷை கலாய்த்திருக்கிறார் சுதாகர்.


கலக்கல்

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க செம கலக்கல் படம், உங்க கேர்ள் பிரெண்ட் பேரு தாஸ் லட்சுமி யா? இல்லை லட்சுமி தாஸா? செம கலாய் என்று படத்தின் காமெடியைப் போற்றிப் புகழ்ந்திருக்கிறார் ரோஷன்.


இதைப் போன்ற மேலும் பல ட்வீட்டுகளால் நிரம்பி வழிகின்றது வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க, நீங்க கலக்குங்க ஜீ....
English summary
Arya's 25th Movie Vasuvum Saravananum Onna Padichavanga Today Released - Fans Twitter Comments.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil