»   »  வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க... "லக்கா மாட்டிகிச்சு" ... ரிலீஸ்!

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க... "லக்கா மாட்டிகிச்சு" ... ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்யா - தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தில் இடம்பெற்ற லக்கா மாட்டிகிச்சு பாடல் இன்று வெளியானது.

5 ஆண்டுகளுக்குப் பின்னர் இயக்குநர் ராஜேஷ், நடிகர் ஆர்யா மற்றும் சந்தானம் மீண்டும் இணைந்திருக்கும் படம் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க.


பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த சூழ்நிலையில் இன்று இமானின் இசையில் படத்தில் இடம்பெற்ற லக்கா மாட்டிகிச்சு பாடல் வெளியாகி உள்ளது, சோனி மியூசிக் வெளியிட்டுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.


பெண்களைத் திட்டி வரும் பாடல்களுக்கு மத்தியில் பெண்களைப் பாராட்டி இந்த பாடல் வரிகள் அமைந்து இருக்கின்றன, கானா ஜெகன் செந்தில் தாஸ் மற்றும் பழனியம்மாள் என்ற 3 பாடகர்கள் இந்தப் பாடலின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி உள்ளனர்.


இந்தப் பாடல் நன்றாக இருப்பதாக பாடலைக் கேட்ட ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.


English summary
Arya's VSOP (Vasuvum Saravananum Onna Padichavanga) – Lucka Maattikkichi Song Today Released.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil