»   »  நடிகர் சத்யராஜைக் கண்டித்து ஏப் 28ல் பெங்களூரில் முழு அடைப்பு!

நடிகர் சத்யராஜைக் கண்டித்து ஏப் 28ல் பெங்களூரில் முழு அடைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கன்னட மக்களைத் தவறாகப் பேசியதாகக் கூறி நடிகர் சத்யராஜுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வட்டாள் நாகராஜ், வரும் ஏப்ரல் 28-ம் தேதி பெங்களூரில் முழு அடைப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வட்டாள் நாகராஜ் கூறுகையில், "காவிரி பிரச்சினை போராட்டத்தின் போது கன்னடர்களையும் கன்னட அமைப்புகளையும் மிக மோசமாகப் பேசினார் சத்யராஜ்.

Vattal Nagaraj announces one day Bandh in Bangalore against Sathyaraj

இது கன்னட மக்களைப் புண்படுத்தியுள்ளது. எனவே அவர் பகிரங்கமாக, நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். அவரின் பேச்சுக்கு எதிராக இன்று தமிழக - கர்நாடக எல்லையில் கன்னட அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

வரும் ஏப்ரல் 28-ம் தேதி பெங்களூருவில் முழு அடைப்பு நடத்தப்படும். பாகுபலி 2 படத்தைத் திரையிடவும் அனுமதிக்க மாட்டோம்," என்றார்.

English summary
Kannada activist Vattal Nagaraj has announced one day Bandh in Bangaloru against actor Sathyaraj

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil