For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வாழு வாழ விடு... வாழ்க்கை தத்துவங்கள் நிறைந்த "நாங்க வேற மாறி" பாடல்... வலிமை திருவிழா ஆரம்பமானது!

  |

  சென்னை : ஒட்டுமொத்தத் தமிழ் ரசிகர்களும் கடந்த 2 ஆண்டுகளாகவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த வலிமை படத்தின் அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டே வருகிறது.

  அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வலிமை படத்திலிருந்து வித விதமான போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு இணையதளத்தை திணறடித்தது.

  தியேட்டர் தெறிக்கும்...வலிமை மாஸ் பாடல்...வேற மாரி கொண்டாடும் அஜித் ரசிகர்கள் தியேட்டர் தெறிக்கும்...வலிமை மாஸ் பாடல்...வேற மாரி கொண்டாடும் அஜித் ரசிகர்கள்

  இந்த நிலையில் மீண்டும் எந்தவித முன்னறிவிப்புமின்றி நேற்று வலிமை படத்தின் முதல் சிங்கிள் "டிராக் நாங்க வேற மாறி" பாடல் வெளியாகி இணையதளத்தில் சக்கைபோடு போட்டு சாதனை செய்து வருகிறது.

  அதிரடியான ஆக்ஷன் கதை

  அதிரடியான ஆக்ஷன் கதை

  நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குனர் வினோத்குமார்,தயாரிப்பாளர் போனி கபூர் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் வலிமை. அதிரடியான ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. பொதுவாக ஒரு திரைப்படத்தை ஆரம்பித்த சில மாதங்களிலேயே அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியிடுவது வழக்கம் ஆனால் வலிமை பட விவகாரத்தில் சற்று வித்தியாசமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வந்தது.

  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

  இதனால் ரசிகர்கள் பலரும் செல்லும் இடமெல்லாம் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு கேட்டு வந்தனர் அதை செல்லமாக கண்டித்து நடிகர் அஜித்குமார் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிறது என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவியது அதன்படி எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் விதவிதமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு அதிரடி காட்டி இருந்தது அதில் நடிகர் அஜித்குமார் 90களில் பார்த்தது போலவே அதே இளமையுடன் ஹாண்ட்சமாக இருக்க பைக் ரேஸிங் பற்றிய பல்வேறு ரெஃபரன்ஸ்கள் அந்த போஸ்டர்களில் இடம் பெற்றிருந்தது.

  பைக் ரேஸிங்

  பைக் ரேஸிங்

  வலிமை படத்தின் கதைப்படி படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டாலும் பைக் ரேஸிங் குறித்த பல்வேறு ரெஃபரன்ஸ்கள் இதில் காணப்பட்டது. எனவே தரமான சம்பவம் படத்தில் காத்திருக்கிறது என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இயக்குனர் வினோத்தின் முந்தைய படங்களான சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்கள் இவருக்கு தமிழ் ரசிகர்களிடையே நற்பெயரை பெற்று தந்துள்ளது மேலும் இவரது படங்கள் மீதான நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் உள்ளது.

  வலிமை

  வலிமை

  இந்த நிலையில் அஜித் வினோத் குமார் முதல் முறையாக இணைந்த நேர்கொண்ட பார்வை இந்தி படத்தின் ரீமேக்காக இருந்தாலும் தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்தது. பெண்கள் குறித்த விழிப்புணர்வு திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு பெருமளவு ஆதரவு அனைத்து தரப்பு மக்களிடமும் கிடைத்தது. இப்போது அதே பேராதரவுடன் இந்த கூட்டணி இப்பொழுது வலிமை படத்திலும் இணைந்துள்ளது. இதில் அஜித்துக்கு ஜோடியாக காலா பட நடிகை ஹுமா குரேஷி நடித்துவருகிறார். யோகி பாபு விஜய் டிவி புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

  நாங்க வேற மாறி

  நாங்க வேற மாறி

  வலிமை இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் நேற்று மாலை வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியானது. "நாங்க வேற மாறி" என ஆரம்பிக்கும் இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து இந்த பாடலையும் பாடியுள்ளார். இவருடன் இணைந்து பாலிவுட் பாடகர் அனுராக் குல்கார்ணியும் பாடியுள்ளார். "எல்லா நாளும் நல்ல நாள்தான்.. எல்லா நேரமும் நல்ல நேரம்தான்" என ஆரம்பமே அமர்க்களமாக பாசிட்டிவ் வரிகளுடன் ஆரம்பிக்கும் இந்தப் பாடல் வாழ்க்கைகு தேவையான வேற மாதிரியான வெறியேற்றும் பாடலாக உள்ளது.

  ரியல் லைஃப் தத்துவங்களை

  ரியல் லைஃப் தத்துவங்களை

  வாழு வாழ விடு.. கருத்து சொல்ல நான் ஞானி இல்ல ஆனா எடுத்து சொன்னா தப்பு இல்ல.. மத்தவங்க கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ.. போன்ற அஜித்தின் ரியல் லைஃப் தத்துவங்களும் இந்த பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ளன. மேலும் தமிழர் பண்பாட்டு கலைகளான தெருக்கூத்து, பொய்க்கால் ஆட்டம், கதகளி, தீ சிலம்பம் என பல்வேறு அம்சங்களும் அடங்கிய கலர்ஃபுல்லாக திருவிழா செட்டப்பில் இந்த பாடல் உருவாகி உள்ளது. இது நடிகர் அஜித்குமாரின் பாடலாக இருந்தாலும் விஜய் ரசிகர்களும் இந்த பாடலை வெகுவாக பாராட்டி சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

  English summary
  Ajith starrer Valimai's movie's single track was released yesterday night and fans are celebrating the song in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X