»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருட்டு விசிடிக்களை மலேசியா, சிங்கப்பூரிலிருந்து கடத்தி வருவோர் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளிதரன் கோரிக்கை விடுத்தார்.

திருட்டு விசிடிக்களை வெளிநாடுகளிலிருந்து கடத்தி வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை சுங்க இலாகா ஆணையர் அலுவலகம் முன் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

முரளிதரன், சென்னை-செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவர் கே.ராஜன், அ.செ. இப்ராகிம் ராவுத்தர் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் கலந்து காண்டனர். பின்னர் முரளிதரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

போதைப் பொருளை கடத்தி வருவது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது எப்படி சமூக விரோத செயலோ,அதே போலத்தான் திருட்டு விசிடிக்களை கடத்தி வருவதும்.

எனவே திருட்டு விசிடிக்களைக் கடத்தி வருவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்த் திரையுலகம் அழிந்து விடும் என்றார் முரளிதரன்.

பின்னர் சில பிரதிநிதிகள் சுங்க இலாகா அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil