»   »  வேதாளம்... என்னதான் வசூல்? வாய் திறக்காத ஏஎம் ரத்னம்!!

வேதாளம்... என்னதான் வசூல்? வாய் திறக்காத ஏஎம் ரத்னம்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேதாளம் படத்தைத் தயாரித்த ஏஎம் ரத்னம், விநியோகித்தவர்கள் தவிர மற்ற அனைவரும் அந்தப் படத்தின் வசூல் குறித்து கண்டபடி எழுதி வருகிறார்கள்.

நாம் விசாரித்த வரையில் தமிழகத்தில் இந்தப் படத்தின் வசூல் இன்னும் ரூ 40 கோடியைத் தாண்டவில்லை. கடும் மழை காரணமாக பல அரங்குகளில் கூட்டமே இல்லை. ஆனால் அதற்குள் ரூ 100 கோடி வசூல் லிஸ்டில் இந்தப் படம் சேர்ந்துவிட்டது என்று பொய்த் தகவல்களை அஜீத் ரசிகர்களே பரப்பி வருகின்றனர்.


இதுகுறித்து தயாரிப்பாளர் ஏஎம் ரத்னத்திடம் விசாரித்தபோது, "படத்தின் வசூல் விபரங்களை இப்போது வெளியிட முடியாது. மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் இனிமேல்தான் படம் பார்க்கும் சூழல் உள்ளது. வேதாளம் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விரபரத்தை நானே விரைவில் வெளியிடுகிறேன். ரசிகர்கள் பொய்யான தகவல்களைப் பரப்பாமல் இருக்க வேண்டும்," என்றார்.


ஆரம்பம் படத்துக்கும் இப்படித்தான் வசூல் குறித்து பொய்யான செய்திகளை பரப்ப, அடுத்த நாளே வருமான வரித் துறையினர் ஏஎம் ரத்னம் அலுவலகத்தை சோதனை செய்து, ஒரு அறையை மட்டும் பூட்டிவிட்டுச் சென்றது நினைவிருக்கலாம்.


சில நம்பகமான தகவல்களின் படி, வேதாளம் படம் தமிழகத்தில் இதுவரை ரூ 40 கோடிகள் வரை வசூலித்துள்ளது.


ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகத்தில் ரூ 9 கோடிகள் கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் அமெரிக்காவில் ரூ 1.80 கோடியும், பிரிட்டனில் 1.25 கோடியும் இந்தப் படம் வசூலித்துள்ளது. மலேசியா, சிங்கப்பூரில் 6 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளதாகக் கூறுகிறார்கள்.


ஆக நேற்று மாலை நிலவரப்படி, வேதாளம் படத்தின் உலகளாவிய வசூல் ரூ 57 கோடி. கன்ஃபர்ம் பண்ண வேண்டியவர் ஏ எம் ரத்னம்!

English summary
Here is the exact box office status of Ajith's Vedalam movie. The movie has collect5ed Rs 57 cr worldwide, according to unofficial sources.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil