»   »  தமிழகத்தில் மட்டும் ரூ.15.5 கோடியாம்! முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைத்த வேதாளம்

தமிழகத்தில் மட்டும் ரூ.15.5 கோடியாம்! முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைத்த வேதாளம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜித் நடித்து நேற்று ரிலீசான வேதாளம் திரைப்படம் தமிழ் திரையுலகில் சத்தமில்லாமல் ஒரு வசூல் சாதனை படைத்துள்ளது. அதாவது, முதல் நாளிலேயே அந்த படம் தமிழகத்தில் மட்டும் 15.5 கோடி வசூலை வாரி குவித்துள்ளதாம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில், அனிருத் இசையமைப்பில் நவம்பர் 10ம் தேதி (நேற்று) வெளியாகியுள்ள திரைப்படம் வேதாளம்.


Vedalam creats new box office record in Tamilnadu

கமல்ஹாசன் நடிப்பில் அதே நாளில் தூங்காவனம் திரைப்படம் வெளியாகி அதுவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி ஒரு பெரிய ஸ்டார் படத்துடன் சேர்ந்து களமிறங்கிய வேதாளம் சளைக்காமல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.


பாக்ஸ் ஆபீஸ் பிரமுகர் ஸ்ரீதர் பிள்ளை கூறுகையில், "வேதாளம் தமிழகத்தில் மட்டும் (வரி தவிர்த்து) தீபாவளி தினத்தில் ரூ.15.5 கோடியை வசூலித்துள்ளது. முதல் நாள் வசூலில் இது ஒரு புது சாதனை" என்று குறிப்பிடுகிறார்.


கடந்த தீபாவளிக்கு திரைக்கு வந்த கத்தி திரைப்படம், தமிழகத்தில் முதல் நாளில், ரூ.12.5 கோடியை வசூலித்தது. ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் முதல் நாளில் ரூ.12.8 கோடி வசூல் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Vedalam creates a new record for a day 1 as it was earn Rs 15.5 Crore on the releasing day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil