»   »  அஜித்தின் வேதாளம் எப்படி இருக்கு..? முதல் பார்வை!

அஜித்தின் வேதாளம் எப்படி இருக்கு..? முதல் பார்வை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல அஜித்தின் தீபாவளி பரிசாக வெளியாகியுள்ளது வேதாளம் திரைப்படம். படம் வெளியாகும் முன்பே முன்பதிவு புக்கிங் மூலமாகவே ரூ.20 கோடியை சம்பாதித்து விட்ட நிலையில், பெரும் எதிர்பார்ப்போடு ரசிகர்கள் படம் பார்க்க சென்றனர். வேதாளம் படம் குறித்த முதல் பார்வை இதோ:

இது ஏதோ புது முயற்சி, கருத்து சொல்லும் படம் என்ற கண்ணோட்டத்தில் வேதாளம் திரையிடப்படும், தியேட்டர் பக்கம் போய்விடாதீர்கள். ஏனெனில் இது முழுக்க, முழுக்க ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் கலந்த ஒரு கமர்சியல் திரைப்படம் மட்டுமே.


சிறுத்தை, வீரம் போன்ற இயக்குநர் சிவாவின் முந்தைய படங்களை பார்த்தவர்களுக்கு அது நன்கு தெரிந்திருக்கும்.


குழந்தை முகத்தில் கொடூரம்

குழந்தை முகத்தில் கொடூரம்

குழந்தை முகத்தோடு, அப்பாவியாய் கொல்கத்தாவில் டாக்சி ஓட்டித்திரியும், ஹீரோ, திடீரென 'பாட்ஷா' போல 'விஸ்வரூபம்' எடுத்தால் எப்படி இருக்கும், அந்த மாற்றத்தின் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பதை பரபரபவென சொல்கிறது திரைப்படம்.


அஜித் ஒன்மேன் ஆர்மி

அஜித் ஒன்மேன் ஆர்மி

வேதாளம் திரைப்படத்தின், மிகப்பெரிய பலம் அஜித். மனிதர் படம் முழுக்க சரவெடியாய் வெடித்து, ஆட்ட நாயகன் விருதை தட்டிச் செல்கிறார். டாக்சி டிரைவராய், கொடூர கொலையாளியாய், கட்டப்பஞ்சாயத்து செய்தாலும், மனதுக்குள் ஈரம் கொண்ட வேதாளமாய் என முப்பரிணாமங்களில் அஜித் ஜொலிக்கிறார்.


ரஜினி, கமலுக்கு பிறகு அஜித்

ரஜினி, கமலுக்கு பிறகு அஜித்

அஜித் சைக்கோபோல முகத்தை வைத்து, குரலை மாற்றி உருமும் காட்சிகளில் தியேட்டரே தெறித்து அதிர்கிறது. ரஜினி (மூன்று முடிச்சு, 16 வயதினிலே), கமல் (சிவப்பு ரோஜாக்கள்) ஆகிய நடிகர்களுக்கு பிறகு அஜித்தைதான், ரசிகர்கள் நெகட்டிவ் ரோலிலும் ஏற்றுக்கொள்கிறார்கள்.


நெகட்டிவ் ரோல்கள்

நெகட்டிவ் ரோல்கள்

வாலி, வில்லன், மக்காங்த்தா போன்ற வெற்றி படங்கள் அதற்கு உதாரணம். அதே பார்முலாவைத்தான் இதிலும் சில காட்சிகளில் கையில் எடுத்துள்ளனர். அந்த காட்சிகளுக்குத்தான் ரசிகர்கள் வரவேற்பும் அதிகம்.


திடீர் மாற்றம்

திடீர் மாற்றம்

பாட்ஷாவில் ரஜினிகாந்த், திடீரென தண்ணீர் பைப்பை பிடுங்கி அடிப்பது, விஸ்வரூபத்தில் திடீரென கமல் எதிரிகளின் தலைமீது ஏறி ருத்ரதாண்டவம் ஆடுவது என அப்பாவி ஹீரோக்களின் திடீர் மாற்றங்கள் அப்படங்களை ரசிக்க வைத்தன. அதுபோன்ற ஒரு திருப்பம் வேதாளத்திலும் வருகிறது. அதுதான் படத்தின் ஜீவ நாடி.


லட்சுமிமேனன் கலக்கல்

லட்சுமிமேனன் கலக்கல்

சிவா ஏற்கனவே கூறிவிட்டதை போல, ஸ்ருதிஹாசனுடன் காதல் காட்சிகள் கிடையாது. தங்கையாக வரும், லட்சுமி மேனனுக்குதான் ஸ்கோர் செய்ய ஏகப்பட்ட வாய்ப்பு. அண்ணன்-தங்கையாக அப்படி ஒரு பொருத்தம் இருவருக்கும். இளம் பெண்களுக்கு, அஜித் மீது கூடுதல் மரியாதை வர இப்படம் காரணமாக இருக்கும் என நம்பலாம்.


தெறி மியூசிக்

தெறி மியூசிக்

எந்த இடத்திலும் ஆபாசம் இல்லாமல் கதை நகர்வதால், வேதாளத்தை குடும்பத்தோடு பார்க்க முடிகிறது. அனிருத்தின், பின்னணி இசை, 'தெறி'. கேரக்டரின் கம்பீரத்திற்கு அந்த பின்னணி இசை வலு சேர்க்கிறது. வீர விநாயகா, ஆலுமா டோலுமா பாடல்களின்போது, தியேட்டரில் ரசிகர் கூட்டம் கெட்ட ஆட்டம் போடுகிறது.


பழகிபோச்சே பாஸ்

பழகிபோச்சே பாஸ்

படத்தில் நிறைகளை போலவே, சில குறைகளும் உள்ளன. முதல்பாதியில் பல அதிரடி திருப்பங்களும், ஆக்ரோஷ சண்டை காட்சிகளும் இருப்பதால் ஜெட் வேகத்தில் பயணிக்கும் திரைக்கதை, இரண்டாம் பாதியில், சென்டிமென்ட் காட்சிகளாலும், பழகி போன பிளாஷ் பேக்காலும் தொய்வடைகிறது. இடைவேளைக்கு பிறகு பல காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பு படியே செல்வதால் அரைத்த மாவையே அரைத்த உணர்வு ஏற்படுகிறது.


ரசிகர்கள் தெறிக்கவிடலாம்

ரசிகர்கள் தெறிக்கவிடலாம்

இருப்பினும், என்னை அறிந்தால் படத்தை போலன்றி, ஏ முதல் சி கிளாஸ் வரை ரீச் ஆகும் படம் இது. அஜித் ரசிகர்களை குறிவைத்து அவரை ஒரு மாஸ் ஹீரோவாக காட்டிய, வீரம் திரைப்பட பார்முலாவே இதிலும் ஒர்க்-அவுட் ஆகியுள்ளது. அஜித் ரசிகர்களை விசில் அடிக்க வைக்கும் பல டயலாக்குகள் படத்திலுள்ளன. அஜித்துக்கு இது மற்றொரு வெற்றிப்படமாக அமையும் என்பதில் ஐயமில்லை என்பதே விமர்சகர்கள் கருத்து.


English summary
Vedalam a gift for Ajith fans. But ecpected scenes reduce the speed of the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil