»   »  வேதாளம் ரிலீஸ் எப்போ?

வேதாளம் ரிலீஸ் எப்போ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேதாளம் படப் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. சென்சார் போகும் முன் படத்தின் டிஜிட்டல் பணிகளைப் பார்வையிட சமீபத்தில் ஜெமினி லேபுக்கு வந்திருந்தார் அஜித்.

அப்போது படத்தை அஜீத்துக்குப் போட்டுக் காட்டியுள்ளார் இயக்குநர் சிவா. மிகவும் திருப்தியாக வந்திருக்கிறது எனப் பாராட்டியுள்ளார் அஜீத்.

Vedalam release date

படத்தை இந்த வாரம் சென்சாருக்கு அனுப்பிவிடும் முடிவில் உள்ளார்களாம்.

இன்னொரு பக்கம் படத்தின் ரிலீஸ் தேதி எதுவெனத் தெரியாததால், ஆவலுடன் காத்திருக்கிறார்கள் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும்.

பொதுவாக அஜித் படங்களை பண்டிகை தினங்களுக்கு சில நாட்களுக்கு முன்பே வெளியிட்டு வசூலை அள்ளுவது வழக்கம். அதன்படி தீபாவளி தினமான நவம்பர் 10-ம் தேதிக்கு 5 நாட்களுக்கு முன்பே படத்தை வெளியிட்டுவிடலாமா என யோசிக்கிறார்களாம்.

இதே தேதியில் தூங்கா வனத்தை வெளியிட கமல் ஹாஸனும் முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Team Vedalam is yet to finalise the release date of the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil