»   »  அஜீத்தின் வேதாளம் இணையத்தில் வெளியானதா?

அஜீத்தின் வேதாளம் இணையத்தில் வெளியானதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் நடிப்பில் உருவாகி இருக்கும் வேதாளம் திரைப்படத்தின் பாடல் மற்றும் காட்சிகள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானதாக செய்திகள் கூறுகின்றன.

அஜீத், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன், சூரி, அப்புக்குட்டி, தம்பி ராமையா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வேதாளம். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.


Vedalam Scenes Leaked On Internet?

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வருகின்ற 10 ம் தேதியில் உலகம் முழுவதும் வெளியாகின்றது. இந்நிலையில் இப்படத்தின் காட்சிகள் மற்றும் இணையத்தில் வெளியானதாக செய்திகள் பரவி வருகின்றன.


அஜீத் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் படம் வேதாளம். இப்படத்தின் ஆலுமா டோலுமா பாடல் டீசர் சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது.


தற்போது இந்தப் பாடலும், அஜீத் வேதாளமாக வரும் படத்தின் ஆரம்பக் காட்சிகளும் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி இருப்பதாக கூறுகின்றனர்.


ஏற்கனவே விஜய்யின் புலி படமும் இந்த மாதிரி இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

English summary
Ajith - Shruti Haasan Starrer Vedalam will be Released on November 10th. Now Sources said Vedalam Aaluma Dolama Song and Ajith Introduction Scenes Leaked Online.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil