»   »  ரசிகர்களுக்கு விஜயதசமியன்று "வீடியோ விருந்து" வைக்கும் அஜீத்

ரசிகர்களுக்கு விஜயதசமியன்று "வீடியோ விருந்து" வைக்கும் அஜீத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேதாளம் படத்தில் இடம்பெற்றுள்ள ஆலுமா டோலுமா பாடலின் வீடியோ மேக்கிங்கை இன்று இரவு 7 மணிக்கு படக்குழுவினர் வெளியிடவிருக்கின்றனர்.

இந்தத் தகவலை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். கடந்த வாரம் வேதாளம் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், தலைப்பு, டீசர், பாடல்கள் என அனைத்தையும் வியாழக்கிழமையில் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.

அஜித் பட வெளியீடுகள் எதுவென்றாலும் வியாழக்கிழமை நடைபெறும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உண்டாகியிருக்கிறது. இதனை உண்மை என்று நிரூபிப்பது போல இப்பாடலின் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகிறது.

தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் வேதாளம் படத்தில் அஜீத்துடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், அஸ்வின், சூரி, தம்பி ராமையா மற்றும் அப்புக்குட்டி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

வீரம் படத்தைத் தொடர்ந்து சிறுத்தை சிவா அஜீத்துடன் 2 வது முறையாக இணைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் வேதாளம் படத்திற்கு எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Ajith's Vedalam Song Making Video will Release Today. Music Composer Anirudh Ravichander took Twitter and Wrote "Just for you guys - #Vedalam - #AalumaDoluma The Making Video featuring Its_Badshah and myself to release at 7pm IST today Gonna be mad!".

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil