»   »  "அக்கட" சீமையில் "ஆவேசம்" காட்டப் போகும் அஜீத்தின் வேதாளம்!

"அக்கட" சீமையில் "ஆவேசம்" காட்டப் போகும் அஜீத்தின் வேதாளம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் நடிப்பில் உருவாகியிருக்கும் வேதாளம் படத்தை, ஆவேசம் என்ற பெயரில் தெலுங்கு மொழியில் டப் செய்து படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி, தம்பி ராமையா, அப்புக்குட்டி ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வேதாளம். சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.


Vedalam Telugu Version Avesham

சமீபத்தில் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு எந்தவிதமான கத்திரியும் போடாமல் யூ சான்றிதழை வழங்கி இருக்கின்றனர். தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 தேதியில் வேதாளம் வெளியாகிறது.


தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் வேதாளம் வெளியாகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெளியாகும் இப்படத்திற்கு ஆவேசம் என்று பெயர் வைத்திருக்கின்றனர்.


இன்னும் சில தினங்களில் படத்தின் டிரெய்லரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் படத்தின் டிரெய்லருக்கு அதிகமான எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.


Vedalam Telugu Version Avesham

மேலும் 8 வருடம் கழித்து அஜீத்தின் நடிப்பில் இந்த வருடம் 2 திரைப்படங்கள் வெளியாகிறது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் என்னை அறிந்தால் திரைப்படம் வெளியானது, தற்போது வேதாளம் தீபாவளி வெளியீடாக வெளியாகவிருக்கிறது.


இதனால் இந்த வருட தீபாவளியை வரவேற்க அஜீத் ரசிகர்கள் அபரிமிதமான ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

English summary
Ajith's Vedalam to Hit Screens on November 10, The Telugu Version will be Titled Avesham. Avesham Release on the Same day in Andhra and Telengana States.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil