»   »  வேதாளம்:டிரெய்லருக்கு முன்னால படம் வெளியாகிடுமோ?

வேதாளம்:டிரெய்லருக்கு முன்னால படம் வெளியாகிடுமோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேதாளம் படத்தின் டிரெய்லர் நேற்று நள்ளிரவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காத்திருந்த ரசிகர்களை வழக்கம் போல இந்த முறையும் படக்குழுவினர் ஏமாற்றி இருக்கின்றனர்.

அஜீத் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வருகின்ற 10 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகின்றது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் படத்தின் டிரெய்லரை வெளியிடுவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.


Vedalam Trailer Release Postponed

இன்று வியாழக்கிழமை என்பதாலும், மேலும் படம் வெளியாவதற்கு முன் வரும் கடைசி வியாழன் என்பதால் எப்படியும் டிரெய்லரை வெளியிடுவார்கள் என்று அனைவரும் காத்திருந்தனர்.


ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று டிரெய்லரை வெளியிட முடியவில்லை என்று, படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகி இருக்கின்றன.


வேதாளம் படத்தின் டீசர், பர்ஸ்ட் லுக், பாடல்கள் போன்றவை ஹிட்டடித்த நிலையில் படக்குழுவினரின் இந்த தாமதத்தால் டிரெய்லரை ஹிட்டடிக்க வைக்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலையில் தற்போது அஜீத் ரசிகர்கள் மூழ்கி உள்ளனர்.


அதே நேரத்தில் கமலின் தூங்காவனம் படக்குழுவினர் 2 டிரெய்லர்களை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


வேதாளம் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிடுவார்களா?

English summary
Ajith's Vedalam Trailer Release Again Postponed. Vedalam Written and Directed by Siruthai Siva, This Movie will be released on 10 November for Diwali festival.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil