»   »  தளபதியின் கோட்டையிலேயே கத்தி வசூலை முறியடித்த வேதாளம்

தளபதியின் கோட்டையிலேயே கத்தி வசூலை முறியடித்த வேதாளம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் உள்ள ராம் முத்துராம் தியேட்டரில் முதல்நாள் வசூலில் அஜீத்தின் வேதாளம் புதிய சாதனை படைத்துள்ளது. மேலும் அந்த தியேட்டரில் கத்தி படம் நிகழ்த்திய சாதனையை வேதாளம் முறியடித்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோர் நடித்த வேதாளம் படம் தீபாவளி அன்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. அனிருத் இசையமைத்துள்ள வேதாளம் ரிலீஸான அன்று தமிழகத்தில் மட்டும் ரூ.15.5 கோடி வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் ஒரு நாள் வசூலில் வேதாளம் புதிய சாதனை படைத்துள்ளது.

கத்தி

கத்தி

முன்னதாக விஜய்யின் கத்தி படம் ரிலீஸான அன்று ரூ.12.5 கோடியும், ரஜினியின் லிங்கா ரூ.12.8 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை

நெல்லை

நெல்லையில் உள்ள பிரபல தியேட்டரான ராம் முத்துராமில் இளையதளபதி விஜய்யின் படங்கள் தான் சக்கை போடு போடும். அங்கு விஜய் ரசிகர்கள் குவிவது அனைவரும் அறிந்ததே.

வேதாளம்

வேதாளம்

விஜய் ரசிகர்கள் அதிகம் வரும் ராம் முத்துராம் தியேட்டரில் வேதாளம் ரிலீஸான அன்று ரூ. 14 லட்சம் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் வேதாளம் அந்த தியேட்டர் வசூலிலும் புதிய சாதனை படைத்துள்ளது.

விஜய்

விஜய்

ராம் முத்தராம் தியேட்டரில் கத்தி படம் தான் இதுவரை அதிகபட்சமாக முதல் நாளில் ரூ.13.5 லட்சம் வசூல் செய்திருந்தது. இந்நிலையில் அந்த சாதனையை வேதாளம் முறியடித்துள்ளது. அந்த தியேட்டரில் வெளியான படங்களிலேயே முதல் நாள் அதிகம் வசூல் செய்த படமும் வேதாளம் தான்.

English summary
Ajith's Vedhalam's first day collection in a popular theatre in Tirunelveli has surpassed Vijay's Kaththi. The theatre is known for Vijay fans' rush.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil